நீதானே எந்தன் பொன் வசந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநினைவெல்லாம் நித்யா

Nee Thane Enthan Song Lyrics in Tamil


ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

—BGM—

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

ஆண் : ஆஹா… நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

—BGM—

ஆண் : பாதை முழுதும் கோடி மலர்கள்…
பாடி வருமே தேவக் குயில்கள்…
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை…
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை…

ஆண் : வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென…
ஜன்னல் திரையிடும் மேகம்…
சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில்…
பிறையும் பௌர்ணமி ஆகும்…
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

—BGM—

ஆண் : ஈர இரவில் நூறு கனவு…
பேதை விழியில் போதை நினைவு…
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்…
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்…

ஆண் : நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்…
ரோஜா மல்லிகை வாசம்…
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்…
தென்றல் கவரிகள் வீசும்…
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

—BGM—


Notes : Nee Thane Enthan Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Nithya (1982). Song Lyrics penned by Vairamuthu. நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading