விதி நதியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரேவந்த்அருண் ராஜ்தடம்

Vidhi Nadhiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்…
முடிவிலி ஆறாகவே…
பாயும் உந்தன் அலைகளின் மேலே…
ஓர் எதிர் ஒளி போலே நான்…

ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்…
விரைந்திடும் ஆறாகவே…
நீளும் அதன் கரைகளின் மேலே…
கால் தடங்களை போலே நீ…

ஆண் : இதழ் மேலே அணியும் புன்னகையும்…
விழியுள்ளே புதையும் கண்ணீரும்…
மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு…
முன்னே செல்கின்றேன்…

ஆண் : நீ ஒரு தினம் காதல் பாய்கிறாய்…
ஏன் மறுதினம் காய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே…

ஆண் : நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய்…
ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே… என் விதி நதியே…

ஆண் : எனக்காய் சில பூக்கள் பிறக்காதா திறக்காதா…
எனக்காய் சில தூறல் மலர்வாயா வின் கிளையே…

ஆண் : சில ஆசைகளை நிறைவேற்றித்தான்…
பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய்…
ஒரு நாள் வீழா மறு நாள் மீள…
என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய்…

ஆண் : நீ ஒரு தினம் காதல் பாய்கிறாய்…
ஏன் மறுதினம் காய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே…

ஆண் : நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய்…
ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய்…
நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய்…
என் விதி நதியே… என் விதி நதியே…
என் விதி நதியே…


Notes : Vidhi Nadhiyae Song Lyrics in Tamil. This Song from Thadam (2019). Song Lyrics penned by Madhan Karky. விதி நதியே பாடல் வரிகள்.