நதியே நைல் நதியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுக்விந்தர் சிங் & அனுராதா ஸ்ரீராம்எஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Nadhiye Niel Nadhiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நதியே… அடி நைல் நதியே…
நனைந்தேன் உன் அழகினிலே…
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து…
மலர் காட்சி ஒன்று வைத்தேன்…
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து…
நானும் வேலி தோட்டம் போட்டேன்…

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…
ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…

ஆண் : நதியே… அடி நைல் நதியே…
நனைந்தேன் உன் அழகினிலே…

BGM

ஆண் : மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே…
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா…

குழு (பெண்கள்) : கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா…

பெண் : நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே…
காதலாச்சா காதலாச்சா…

குழு (பெண்கள்) : காதலாச்சா காதலாச்சா…

ஆண் : பாபிலோனின் தொங்கும் தோட்டம்…
உன்னை பார்த்தால் அதிசயிக்கும்…
அடி ஹீட்டர் போட்டு வந்த…
புது வாட்டர் பால்ஸ் நீயா…

பெண் : எனை இன்பலோகம் சேர்க்கும்…
ஒரு சேட்லைட்டும் நீயா…

ஆண் : ஓ நதியே… அடி நைல் நதியே…

பெண் : னனனன னா…

ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே…

BGM

பெண் : உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே…
இன்பமாகும் இன்பமாகும்…

குழு (பெண்கள்) : இன்பமாகும் இன்பமாகும்….

ஆண் : தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பதே…
சொர்கமாகும் சொர்கமாகும்…

குழு (பெண்கள்) : சொர்கமாகும் சொர்கமாகும்…

பெண் : நூறு கிராம்தான் இதயம் அதிலே…
நூறு டன்னாய் உன் நினைவு…

ஆண் : அந்த உலக அழகி யாரும்…
உந்தன் அழகில் பாதி இல்லை…

பெண் : உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க…
அந்த நியூட்டன் இன்று இல்லை…

ஆண் : நதியே… அடி நைல் நதியே…

பெண் : லலல லா…

ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே…
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து…
மலர் காட்சி ஒன்று வைத்தேன்…
உன் வெட்கம் பார்த்து பார்த்து…
நானும் வேலி தோட்டம் போட்டேன்…

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…
ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…

பெண் : ஓ நிலா என் ஊர்வலமா…
என் முகம் பனி பூவனமா…
லா லா லால லால லா லால லா…

BGM


Notes : Nadhiye Niel Nadhiye Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by . நதியே நைல் நதியே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top