எங்கள் வீட்டில் எல்லா நாளும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம், அருண்மொழி & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Engal Veetil Ella Naalum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…
இது ஆனந்த பூந்தோட்டம்…
அன்பின் ஆலயம்…

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

—BGM—

ஆண் : பாடும் பறவை கூட்டங்களே…
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்…
அண்ணன் என்ற சொந்தமே…
அன்னை ஆனதை பாருங்கள்…

—BGM—

ஆண் : சிலுவைகளை நீ சுமந்து…
மாலைகள் எமக்கு சூட்டினாய்…
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்…
வானத்தை போல மாறினாய்…

ஆண் : விழியோடு நீ குடையாவதால்…
விழிகள் நனைவதில்லை…
நெஞ்சில் பூமழை…

பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண்: ஆ ஹா ஹா…

பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

—BGM—

ஆண் : எங்கள் சொந்தம் பார்த்தாலே…
சொர்க்கம் சொக்கி போகுமே…
எங்கள் வீட்டில் பூத்தாலே…
பூவின் ஆயுள் கூடுமே…

பெண் : ஆ ஹா ஹா ஆ…
ஆ ஆ ஆ ஆ…

ஆண் : இரண்டு கண்கள் என்றாலும்…
பார்வை என்றும் ஒன்றுதான்…
உருவத்திலே தனித்தனிதான்…
உள்ளம் என்றும் ஒன்றுதான்…

ஆண் : ஒரு சேவல்தான் அடைகாத்தது…
இந்த அதிசயம் பாருங்கள்…
அண்ணனை வாழ்த்துங்கள்…

பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண்: ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண்: ஆ ஹா ஹா…

பெண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…
இது ஆனந்த பூந்தோட்டம்…
அன்பின் ஆலயம்…

ஆண் & பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் & பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

—BGM—


Notes : Engal Veetil Ella Naalum Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by Pa Vijay. எங்கள் வீட்டில் எல்லா நாளும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading