theeyaga-thondri-song-lyrics-in-Tamil

தீயாக தோன்றி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நாட்டு ராஜா துரைஹரிஹரன் & ஷங்கர் மகாதேவன்கிருஷ்ணா கிஷோர்அரண்மனை 3

Theeyaga Thondri Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீயாக தோன்றி ஒளியாகும் வேலா…
வான் மேகமாய் மழை ஊற்றுவாயே…
வாராத போதும் வரமாகும் வேலா…
கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே…

ஆண் : தேடாத போதே கண் முன் தோன்றுவாயே…
வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே…
தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே…
மாறா உன் பூவடி என் கைபிடிதான் சேரேனோ…

ஆண் : வேலா… கதிர் வேலா… வடிவேலா…

குழு (ஆண்கள்) : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா…
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா…
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா…
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா…

குழு (ஆண்கள்) : எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலைய்யா…
எது நடந்தாலும் உன்னாலேதான் முருகைய்யா…
தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா…
எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா…

BGM

குழு (ஆண்கள்) : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…

ஆண் : ஆறாக பாலாக ஊற்றிட…
தேனாக பூமாலை சூட்டிட…
ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா…

ஆண் : சந்தனம் பூசிய கந்தனின்…
திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே…

ஆண் : யாகமும் தொடங்கிட…
மேகமும் பொழிந்திட…
தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே…

ஆண் : தட் தட் தட முற்றும் தடை விலகிட…
எழு முருகா…

ஆண் : டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட…
திரு முருகா…

ஆண் : சரவணனே வேல் முருகா…
ஷண்முகனே மால் மருகா…

குழு (ஆண்கள்) : கைகள் கொண்டு தீபம் ஏற்றிட…
கண்கள் நம்மை காவல் காத்திட…
கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட…
கந்தா நீ அருள்வாய்…

குழு (ஆண்கள்) : வேலா… கதிர் வேலா… வடிவேலா…

குழு (ஆண்கள்) : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா…
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா…
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா…
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா…

குழு (ஆண்கள்) : எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலைய்யா…
எது நடந்தாலும் உன்னாலேதான் முருகைய்யா…
தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா…
எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா…

குழு (ஆண்கள்) : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…

BGM

குழு (ஆண்கள்) : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா…

குழு (ஆண்கள்) : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா…
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா…
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா…
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா…

BGM


Notes : Theeyaga Thondri Song Lyrics in Tamil. This Song from Aranmanai 3 (2021). Song Lyrics penned by Naattu Raja Durai. தீயாக தோன்றி பாடல் வரிகள்.