முருகா என்றழைக்கவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எம்.கனக கிருஷ்ணன்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Muruga Endrazhaikkava Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…

—BGM—

ஆண் : ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா…
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா…
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது…
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது…
நீ அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா…

ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…

—BGM—

ஆண் : நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா முருகா…
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா…
அந்தப் பாவினிலே மனமுருகி நின்றாயப்பா…
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா…
உலகுக்குப் பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா…

{ ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்… } * (2)

—BGM—

ஆண் : முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க…
முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க…
நீ முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா…
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா…
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா…
நீ கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா…

ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…

—BGM—

ஆண் : நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா…
நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா…
முருகா நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா…
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா…
கண்கள் குளிர வந்து நின்றாடப்பா…
நீ காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா…

ஆண் : உன்னை முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…
முருகா…


Notes : Muruga Endrazhaikkava Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by M.Kanaka Krishnan. முருகா என்றழைக்கவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading