Tag Archives: ஏகாதேசி

வெட்டருவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிடி. வேல்முருகன்தர்புகா சிவாகிடாரி

Vettaruva Veecharuva Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

ஆண் : யாராரோ காடு பாத்தாக…
சாமி பூதம் எல்லாம்…
கிடையாடு போட்ட பாதையில்…
நீயும் நானும் போறோம்…

BGM

ஆண் : ஊருக்குள் பல வேஷம்தான்…
ஒரு நேரம் வன வாசம்தான்…
சூதாட்டம் இங்கு ஆடாம…
சூரியனும் அட முளைக்காதா…

ஆண் : எளிது விடும் மூச்சில்…
வலியது உலை காச்சும்…
உண்மையில் அரிசியில…
அட எவனுக்கும் பேர் இல்ல…

BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM


Notes : Vettaruva Veecharuva Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. வெட்டருவா பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள்ள நின்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிசஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil


BGM

பெண் : மீசை முடி வாங்கியாந்து…
மூக்குத்தியா போட போறேன்…
வாச படி தாண்டி போயி வாழப்போறேன்…
வாழப்போறேன்…

பெண் : சட்டம் பல போலவந்து…
சட்டுனுதான் கைய நீட்ட…
நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி ஆத்தில் ஏது…

பெண் : துள்ளுக்கெடா போல நானும் நாளும்…
துண்டு பட்டேன் உள்ளுக்குள்ள ஏன்தானோ…

பெண் : நா ஊர்வழிய மறந்துப்புட்டேன்…
உன் மடிசாய…
வா உன் வழிய திறந்துப்புட்டேன்…
கொடிகாய…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ள நின்னுகிட்டு…
கொட்டடிச்சு வாரானே…
மஞ்சனத்தி பூவ போல…
மனன்கொத்தி போறானே…

பெண் : உறங்கி நாளாச்சு…
உடம்பு நூலாச்சு…
உசுரே மருகாதே திருட வருவானே…

BGM


Notes : Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. நெஞ்சுக்குள்ள நின்னு பாடல் வரிகள்.


வண்டியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோணி தாசன் & ஏகாதேசிஅந்தோனி தாசன் & சஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil


ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

ஆண் : அந்த வண்டி நெல்ல ஊற வைக்க…
வண்டி நெல்ல ஊற வைக்க வைகை…
ஆத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும்…

BGM

ஆண் : குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
அம்மாவுக்கு குண்டானில நெல்லு வரும்…

BGM

ஆண் : அந்த குண்டான் நெல்ல ஊற வைக்க…
குண்டான் நெல்ல ஊற வைக்க…
கொள்ளிடத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும்…

ஆண் : ஹேய் பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும்…

BGM

பெண் : விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு…
போதும் போதுமே நா வாழ…
விடிய மறந்திடு ராத்திரியே…
வேற எதுவுமே வேணாம்…

பெண் : உருவம் பார்த்தே உசுரு போதே…
என்ன மாயந்தான் நீ செஞ்சே…

பெண் : யாத்தே தாங்கல தூதா காட்டுல…
போதை ஏத்துதே மீசை…
தீபம் ஊமையா போக சாபந்தான்…
நானும் கூடதான் ஆச…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…

ஆண் : வண்டி நெல்ல ஊற வைக்க…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும் ஹோய்…


Notes : Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Anthony Daasan, Ekadesi. வண்டியில பாடல் வரிகள்.


அழகான சதிகாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிவேல்முருகன்ஜி.வி. பிரகாஷ் குமார்ரெபெல்

Azhagana Sathigari Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறாடா…
யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டாடா…

ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாளே…
யே கொள்ளத்தான் கொண்டுவந்த கண்ணாலே…

ஆண் : அந்த அச்சு வெல்லம் எனக்கு வேணும் அங்காளி…
அவள வச்சிக்கிட்டு வணங்க வேணும் பங்காளி…

ஆண் : யே வஞ்சி வந்தா போதும்…
அட கஞ்சி கூட வேணா…
யே பச்சை கிளி போதும்…
ஒரு பஞ்சு மெத்த வேணாம்…

ஆண் : ஏய் உப்பு கல்லு கூட இப்போ சக்கரையா போச்சு…
நா நிம்மதியா தூங்கி அட பத்து நாளு ஆச்சு…

BGM

ஆண் : செல போல கொலக்காரி வந்தாளே…
விலையில்லா மது போத தந்தாளே…
தலவாழ எல போல வந்தாளே…
பசியாற சிரிப்பு அள்ளி தந்தாளே…

ஆண் : வெக்க படுது என்ன வெட்டிப்புட்டு போறா…
பக்கத்துல வந்தா நா ஆவேனே நூறா…

ஆண் : காம்பசாட்டம் நானும் யே சுத்திதானே வாறேன்…
என்ன கண்டுகிட்டா போதும் நா கட்டிகிறேனே…

ஆண் : ஏய் புத்தகத்த பாத்தா வாந்தி எதுக்குறேன்…
அந்த பொண்ண பாக்க நாலு வேளை குளிக்கிறேன்…

ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறாடா…
யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டாடா…

BGM

ஆண் : தெருநாய்க்கும் தோஸ்தாகி போனேனே…
தேர் பாக்கா அவ பாத்து நின்னேனே…
ஆகாசம் அவளாகி போனேனே…
ராவெல்லாம் கூர்க்காவா நின்னேனே…

ஆண் : உள்ளுக்குள்ள பாரு ஒரு கலவரந்தான் போது…
தில்லு முல்லு வேல என் முன்னால ஏது…

ஆண் : பச்சரிசி பல்லு…
அட பண்ணருவா மூக்கு…
சில்வர்கெண்ட கண்ணு…
அவ செம்பருத்திடா…

ஆண் : அட பாம்பாட்டி போல என்ன படுத்துறா…
யே தூக்கத்தையே புடவையாட்டம் உடுத்துறா…

ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறாடா…
யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டாடா…

ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாளே…
யே கொள்ளத்தான் கொண்டுவந்த கண்ணாலே…

ஆண் : அந்த அச்சு வெல்லம் எனக்கு வேணும் அங்காளி…
அவள வச்சிக்கிட்டு வணங்க வேணும் பங்காளி…

ஆண் : யே வஞ்சி வந்தா போதும்…
அட கஞ்சி கூட வேணா…
யே பச்சை கிளி போதும்…
ஒரு பஞ்சு மெத்த வேணாம்…

ஆண் : ஏய் உப்பு கல்லு கூட இப்போ சக்கரையா போச்சு…
நா நிம்மதியா தூங்கி அட பத்து நாளு ஆச்சு…


Notes : Azhagana Sathigari Song Lyrics in Tamil. This Song from Rebel (2023). Song Lyrics penned by Ekadesi. அழகான சதிகாரி பாடல் வரிகள்.


karuva-mara-kaatukulla-song-lyrics-in-tamil

கருவமர காட்டுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிஅந்தோனி தாசன் ஜஸ்டின் பிரபாகரன்ராவண கோட்டம்

Karuva Mara Kaatukulla Song Lyrics in Tamil


ஆண் : கருவமர காட்டுக்குள்ள…
அய்யா…
கருவமர காட்டுக்குள்ள…
கரி மூட்டம் போடயில்ல…

ஆண் : ஈட்டு போட்ட எமக்கள…
எவன் தின்ன கொடுத்தோமே…
எவன் தின்ன கொடுத்தோமே…
ஏ அய்யா…

ஆண் : இந்த பாவிப் பய சொல்லினால…
இந்த பாவிப் பய சொல்லினால…
பாவி பய சொல்லினால…
புள்ளைகள இழந்து இருக்குமயா…

ஆண் : இங்க குருவிகள சுட்டாலே…
கொல பதறி போகுமய்யா…
கொல பதறி போகுமய்யா…
கொல பதறி போகுமய்யா…

ஆண் : வடுசர காவுக்குள்ள…
ஏ அய்யா…
வடுசர காவுக்குள்ள…
மனசபடு வந்ததய்யா…

ஆண் : துப்பாக்கி தூக்கி போட்டு போயிருவேன்…
தொண்டக்குழி தொலைச்சிபுட்டேன்…
துரோகத்த என்ன செய்ய…
இந்த துரோகத்த என்ன செய்ய…
அய்யா…


Notes : Karuva Mara Kaatukulla Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by K Ekadesi. கருவமர காட்டுக்குள்ள பாடல் வரிகள்.


தல சாய்ஞ்சிருச்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிஅந்தோனி தாசன் & மதுரை சந்திரன்ஜஸ்டின் பிரபாகரன்ராவண கோட்டம்

Thala Saanjuruche Song Lyrics in Tamil


BGM

ஆண் : தல சாய்ஞ்சிருச்சே…
தல சாய்ஞ்சிருச்சே…
அட நாடு இருண்டுருச்சே…
அட நாடு இருண்டுருச்சே…

ஆண் : சாமியெல்லாம் செத்துபோனா…
சாமியெல்லாம் செத்துபோனா…
கோயிலத்தான் என்ன செய்ய…
கோயிலத்தான் என்ன செய்ய…
சொல்லுங்கடா என் அப்பேன்…

BGM

ஆண் : மன்னாதி மன்னரு எங்க அய்யா…
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா…

குழு : அவர் மரியாத குறையாத சிங்கமய்யா…
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா…

ஆண் : அஞ்சாத சிங்கன்டா எங்க அய்யா…
அட அய்யானாரு சாமிடா எங்க அய்யா…

குழு : அட அய்யானாரு சாமிடா எங்க அய்யா…
அட அய்யானாரு சாமிடா எங்க அய்யா…

ஆண் : குணிஞ்சிதான் கிடந்தவன…
அட நிமிந்துதான் நடக்க வச்சாரு…
ஊரு ஊருன்னு நெஞ்சில் சுமந்த அய்யா…
உறங்கித்தான் போனாரு…

குழு : இப்ப ஊர்வலம் போறாரு…
அட உசரமா போறாரு…
கொடி கட்டி வாழ்ந்தவரு…
அட கோடி சனம் பார்த்தவரு…
வாயில்லா சீமனுக்கும்…
ஒரு வரம் தந்தம் காத்தவரு…

BGM

ஆண் : வீராதி வீரன்டா எங்க அய்யா…
ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா…

குழு : ஒரு வேஷம்தான் போடாத தங்கம் அய்யா…
ஒரு வேஷம்தான் போடாத தங்கம் அய்யா…

ஆண் : சீறிடும் சிறுத்தடா எங்க அய்யா…
எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா…

குழு : எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா…
எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா…

ஆண் : சமுதாய காவலரு…
எங்க சரித்திர நாயகரு…
சுத்தமான சொல்லு கொண்ட அய்யா…
இப்பம் போறாரு மண்ணடிச்சி…

குழு : நாங்க வணங்குறோம் கால தொட்டு…
கொட்டும் மேளத்த வெளுத்து கட்டுடா…
நேருக்கு நேர நின்னு…
அட பேசிடும் ஆளு இவரு…
நட்புக்கு பேரு போன…
எங்க நம்பிக்கையானவரு…

BGM

ஆண் : தேசாதி தேசமெல்லாம்…
கேட்டுக்கிட்டு அழுகுதையா…
எப்பா போயிட்டியப்பா…

ஆண் : தேசாதி தேசமெல்லாம்…
கேட்டுக்கிட்டு அழுகுதையா…
எடுத்துக்கெடா எங்க உசிர…
கொடுத்திருடா அய்யா உசிர…
மண்ணவிட்டு போற தூரம்மா…
அய்யா உன்ன விட்டு ஊருக்கு மக்கா…

ஆண் : எப்பா எப்பா…

ஆண் : ஏ புளுத்து போன ஊருக்குள்ள…
கோபுரமா போறியிரியளே…
என் பெத்த அப்பா…
எழுந்திருச்சி வாப்பா…

ஆண் : ஏ புளுத்து போன ஊருக்குள்ள…
கோபுரமா போறியிரியளே…
எங்கதான் அவசரம்ப்பா…
எங்கள விட்டு போறியய்யா…
தேரு மேல போனவரே…
எங்க தேத்ததறது யாரு அய்யா…
அய்யா…

ஆண் : சித்தம் கலங்குதடா…
கலங்குதடா…
இரத்தம் கொதிக்குதடா…
கொதிக்குதடா…
யுத்தம் புரிந்திடுவோம்…
புரிந்திடுவோம்…
வாடா வாடா வாடா…

ஆண் : பாராட்டு…
குழு : பெற்றவரு…
ஆண் : பல ஊரு…
குழு : காத்தவரு…
ஆண் : எங்கள விட்டு…

குழு : எங்கய்யா போறாரு…
எங்கய்யா போறாரு…
எங்கய்யா போறாரு…
எங்கய்யா போறாரு…

குழு : நக்கி புழைக்கவில்ல…
பிச்சை எடுக்கவில்ல…
மோதித்தான் பாத்திருவோம்…
வாடா வாடா வாடா…

ஆண் : மாப்பிள்ள…
குழு : போறார்டா…
ஆண் : மாறல்தான்…
குழு : வாறார்டா…
ஆண் : ஏறாத…
குழு : தேர் எறி…
ஆண் : எங்கய்யா…
குழு : போறாக…

குழு : காத்தெல்லாம் ஒப்பாரி…
கருங்கெல்லாம் கண்ணீரு…
அதிகாரம் பாஞ்சிருச்சே…
ஒரு சதி ஒன்னு நடந்திருச்சே…
அட பூவாசம் உள்ள ஊரு…
இப்பம் புண வாசம் ஆயிருச்சே…

ஆண் : மன்னாதி மன்னருதான் எங்க அய்யா…
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா…

குழு : அவர் மரியாத குறையாத சிங்கமய்யா…
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா…

ஆண் : வீராதி வீரன்டா எங்க அய்யா…
ஒரு வேஷம்தான் போடாத தங்கம் அய்யா…

குழு : ஒரு வேஷம்தான் போடாத தங்கம் அய்யா…
ஒரு வேஷம்தான் போடாத தங்கம் அய்யா…

குழு : நாதியத்து போனமடா…
நாதியத்து போனமடா…
குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…

குழு : குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…
குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…

குழு : குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…
குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…

குழு : குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…
குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…

குழு : குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…
குலசாமி போகுதடா…
நம்ம குலசாமி போகுதடா…


Notes : Thala Saanjuruche Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by K Ekadesi. தல சாய்ஞ்சிருச்சே பாடல் வரிகள்.


ராவணன் கோட்டத்துல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிதிவாகர்ஜஸ்டின் பிரபாகரன்இராவண கோட்டம்

Raavana Kottathula Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

ஆண் : ஏ… வாலாட்ட முடியாது…
நாங்க தனி சர்க்காரு…
ராணுவம் வந்தா கூட…
மூடிக்கிட்டு உக்காரு…

ஆண் : அட குத்த வச்ச தக்காளி…
கொன்னு போரா பங்காளி…
மிச்ச மீதி வைக்காம…
மிரட்டுற உருட்டுற ஆளத்த கடந்து…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

BGM

ஆண் : விவரமான ஆளுங்க…
அப்துல்கலாம் ஊருங்க…
சொல்லாம செய்வோமே…
சொந்தம் பந்தம் எல்லாமே…

BGM

ஆண் : சரித்திரமுள்ள ஊருதான்…
சங்கதி உண்டு நூறுதான்…
ஒரு பாயில் ஊரே தூங்கும்…
ஒத்துமை தான் பாருங்க…

ஆண் : அடி கட்டிப்போன…
தறுக்கு தறுக்கு…
எங்க தேகம் பாரு…
திருக்கு திருக்கு…
அட குத்தி பாரேன்…
திருக்கு திருக்கு…
சும்மா மச்சான் மாரே…
திருக்கு திருக்கு…

ஆண் : நாங்க முயல் வேட்ட போனாலும்…
முன்னாடி நிப்போங்க…
ஒரு சிங்கந்தான் வந்தாலும்…
சிகரெட்டு கேப்போங்க…

ஆண் : செம கருவமுள்ளு உறவப்போல…
வீட்டுக்கு வெளிய விருந்தின வந்தினம்…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

ஆண் : ஏ… வாலாட்ட முடியாது…
நாங்க தனி சர்க்காரு…
ராணுவம் வந்தா கூட…
மூடிக்கிட்டு உக்காரு…

BGM

ஆண் : எறும்புக்கும் பத்த நீரச்சி…
எறுமைக குளிச்சி நாளாச்சி…
சண்டாள சீமையில…
தண்ணீர் கூட காசாச்சு…

BGM

ஆண் : காடுகளெல்லாம் கட்டிமா…
கக்கூஸ் போன கட்டணம்மா…
காதோட பம்பணம் போல…
ஆடும் வாழ்க்கை வந்தாச்சு…

ஆண் : ஒரு பச்சம் தாங்க…
தருக்கு தருக்கு…
அட பாசம் உண்டு…
தருக்கு தருக்கு…
வெறும் வேஷம் இல்ல…
தருக்கு தருக்கு…
வெறும் நேசம் உண்டு…
தருக்கு தருக்கு…

ஆண் : நாங்க வாழ்ந்தாலும் செத்தாலும்…
மரியாதை கேப்போங்க…
அட காஞ்சாலும் ஓஞ்சாலும்…
வில போகமாட்டோங்க…

ஆண் : ஓரு சாதியில்ல சண்டையில்ல…
அனைவரும் சமமென…
அறிஞ்சிட பிழைப்போங்க…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜா தான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

ஆண் : ஏ… வாலாட்ட முடியாது…
நாங்க தனி சர்க்காரு…
ராணுவம் வந்தா கூட…
மூடிக்கிட்டு உக்காரு…

BGM


Notes : Raavana Kottathula Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by Ekadesi. ராவணன் கோட்டத்துல பாடல் வரிகள்.


அடி கட்டழகு கருவாச்சி

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மாயா மஹாலிங்கம் & ஏகாதேசிஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்கள்வன்

Adi Kattazhagu Karuvaachi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி கட்டழகு கருவாச்சி…
உம்மேல காதல் வந்து உருவாச்சு…
என் கண்ணால கண்ணி வச்சு…
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்சு…

ஆண் : பனிமழையா நீ எம்மேல படரனும்…
பூஞ்செடியா நான் உன்னால வளரனும்…
மலரனும் மகிழனும்…
ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்…

ஆண் : அடி கட்டழகு கருவாச்சி…
உம்மேல காதல் வந்து உருவாச்சு…
என் கண்ணால கண்ணி வச்சு…
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்சு…

BGM

ஆண் : ஏ… கல்லு மனச என்ன செஞ்ச…
அல்லிமலர் போல ஆகிடுச்சே…
ஒம்ம நெனப்பு நித்தம் வந்து…
சாம கோழியாட்டம் கூவிடுச்சே…

ஆண் : நீ அச்சுவெல்லம் வாங்கி என்னோட பேச…
கெட்ட வார்த்தையெல்லாம் விட்டேனடி…
என்ன பெத்த வாசம் உன்மேல வீச…
உச்சி வானம் ஏட்டி தொட்டேனடி…
சொன்னபடி கேக்கும் நல்ல புள்ளயானேன்…
என்னவிட்டு நீயும் போகாதடி…

BGM

ஆண் : அடி கட்டழகு கருவாச்சி…
உம்மேல காதல் வந்து உருவாச்சு…
என் கண்ணால கண்ணி வச்சு…
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்சு…

ஆண் : பனிமழையா நீ எம்மேல படரணும்…
பூஞ்செடியா நான் உன்னால வளரணும்…
மலரனும் மகிழனும்…
ஆனந்தத்தில் நா கொண்டாடனும்…

ஆண் : அடி கட்டழகு கருவாச்சி…
உம்மேல காதல் வந்து உருவாச்சு…
என் கண்ணால கண்ணி வச்சு… …
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்சு…

BGM


Notes : Adi Kattazhagu Karuvaachi Song Lyrics in Tamil. This Song from Kalvan (2023). Song Lyrics penned by Maya Mahalingam & Ekadesi. அடி கட்டழகு கருவாச்சி பாடல் வரிகள்.


ஒத்த சொல்லால

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிவேல்முருகன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Otha Sollaala Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

ஆண் : ஏ… பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு…
ஆறொன்னு ஓடுறத பாரு…

ஆண் : அட பட்டாம் பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு…
பட்டாசு போல நா வெடிச்சேன்…
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவதான்…
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா…

BGM

ஆண் : என் பவுடா் டப்பா தீா்ந்து போனது…
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது…
நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன்…
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே…

ஆண் : ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே…
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே…

BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

BGM

ஆண் : ஏ… கட்ட வண்டி கட்டி வந்துதான்…
அவ கண்ணழக பாா்த்து போங்கடா…
அட கட்டு சோறு கட்டி வந்துதான்…
அவ கழுத்தழக பாத்து போங்கடா…

ஆண் : கத்தாழ பழம் சிவப்பு…
முத்தாத இளம் சிரிப்பு…
வத்தாத அவ இடுப்பு…
நா கிறுக்கானேன்…

BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

BGM

ஆண் : அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்…
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்…
ஹே… ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்…
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்…

ஆண் : பொண்ணு கருப்பட்டி…
கண்ணு தீப்பெட்டி…
மென்னு தின்னாலே ஒரு வாட்டி…

BGM

ஆண் : ஹே… ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…

ஆண் : அட பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு…
ஆறொன்னு ஓடுறத பாரு…

ஆண் : அட பட்டாம் பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு…
பட்டாசு போல நா வெடிச்சேன்…
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவதான்…
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா…


Notes : Otha Sollaala Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Yegathasi. ஒத்த சொல்லால பாடல் வரிகள்.


மண்ணுருண்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிசெந்தில் கணேஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Mannurunda Song Lyrics in Tamil


ஆண் : மண்ணுருண்ட மேல… அ… அ…
மண்ணுருண்ட மேல…
மனுச பய ஆட்டம் பாரு…
ஆ… ஆ… ஆட்டம் பாரு…
ஹே… ஹே… ஆட்டம் பாரு ஆட்டம் பாரு…
ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…

ஆண் : மண்ணுருண்ட மேல…
இங்க மனுச பய ஆட்டம் பாரு…
கண்ணு ரெண்ட மூடிப் புட்டா…
வீதியில போகும் தேரு…

ஆண் : அண்டாவுல கொண்டு வந்து…
சாரயத்த ஊத்து…
அய்யாவோட ஊர்வலத்துல…
ஆடுங்கட கூத்து…

ஆண் : ஏழ பணக்காரன் இங்க…
எல்லாம் ஒன்னு பங்கு…
கடைசில மனுஷனுக்கு…
ஊதுவாங்க சங்கு…

ஆண் : ஏழ பணக்காரன் இங்க…
எல்லாம் ஒன்னு பங்கு…
கடைசில மனுஷனுக்கு…
ஊதுவாங்க சங்கு…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

BGM

ஆண் : நெத்திக் காசு ஒத்த ரூவா…
கூட வரும் சொத்து…
ஏய்… ஒத்த ரூவா ஆ… ஆ…
ஒத்த ரூவா ஏய்… ஏய்…
ஒத்த ரூவா ஒத்த ரூவா…
ஒத்த ஒத்த ஒத்த ஒத்த…
ஒத்த ஒத்த ஒத்த…

ஆண் : நெத்திக் காசு ஒத்த ரூவா…
கூட வரும் சொத்து தானே…
செத்தவரும் சேர்ந்து ஆட…
வாங்கிப் போட்டு குத்துவோமே…
சாராயம் குடிச்சவங்க…
வேட்டி அவுழுந்து விழுமே…
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்…
பொம்பளைங்க அழுமே…

ஆண் : ஆயிரம் பேரு இருந்தாலும்…
கூட யாரும் வரலடா…
அடுக்கு மாடி வீடு இருந்தும்…
ஆறடிதான் மெய்யடா…

ஆண் : ஆயிரம் பேரு இருந்தாலும்…
கூட யாரும் வரலடா…
அடுக்கு மாடி வீடு இருந்தும்…
ஆறடிதான் மெய்யடா…

ஆண் : டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான் டா…

டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான் டா…

டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான் டா…

டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான் டா…

ஆண் : கீழ் சாதி உடம்புக்குள்ள… ஏ… ஏ…
கீழ் சாதி உடம்புக்குள்ள…
ஓடுறது சாக்கடையா…
அய்யா ஓடுறது சாக்கடையா…

ஆண் : அந்த மேல் சாதி காரனுக்கு…
அந்த மேல் சாதி காரனுக்கு…
ரெண்டு கொம்பு இருந்தா ஆ… ஆ…
கொம்பு இருந்தா ஏய்… ஏய்…
கொம்பு இருந்தா கொம்பு இருந்தா…
கொம்பு கொம்பு கொம்பு கொம்பு…
கொம்பு கொம்பு கொம்பே…

ஆண் : கீழ் சாதி உடம்புக்குள்ள…
ஓடுறது சாக்கடையா…
மேல் சாதி காரனுக்கு…
கொம்பு இருந்தா காட்டுங்கையா…
உழைக்குற கூட்டம் எல்லாம்…
கீழ் சாதி மனுஷன்கலாம்…
உக்காந்து திங்கறவன்ல்லாம்…
மேல் சாதி வம்சங்கலாம்…

ஆண் : என்னங்கடா நாடு…
அட சாதிய தூக்கி போடு…
ஏய்… அட என்னங்கடா நாடு…
அட சாதிய பொதைச்சு மூடு…

ஆண் : என்னங்கடா நாடு…
அட சாதிய தூக்கி போடு…
அட என்னங்கடா நாடு…
அட சாதிய பொதைச்சு மூடு…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

ஆண் : டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான் டா…

BGM


Notes : Mannurunda Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Ekadesi. மண்ணுருண்ட பாடல் வரிகள்.