அழகான சதிகாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிவேல்முருகன்ஜி.வி. பிரகாஷ் குமார்ரெபெல்

Azhagana Sathigari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறாடா…
யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டாடா…

ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாளே…
யே கொள்ளத்தான் கொண்டுவந்த கண்ணாலே…

ஆண் : அந்த அச்சு வெல்லம் எனக்கு வேணும் அங்காளி…
அவள வச்சிக்கிட்டு வணங்க வேணும் பங்காளி…

ஆண் : யே வஞ்சி வந்தா போதும்…
அட கஞ்சி கூட வேணா…
யே பச்சை கிளி போதும்…
ஒரு பஞ்சு மெத்த வேணாம்…

ஆண் : ஏய் உப்பு கல்லு கூட இப்போ சக்கரையா போச்சு…
நா நிம்மதியா தூங்கி அட பத்து நாளு ஆச்சு…

—BGM—

ஆண் : செல போல கொலக்காரி வந்தாளே…
விலையில்லா மது போத தந்தாளே…
தலவாழ எல போல வந்தாளே…
பசியாற சிரிப்பு அள்ளி தந்தாளே…

ஆண் : வெக்க படுது என்ன வெட்டிப்புட்டு போறா…
பக்கத்துல வந்தா நா ஆவேனே நூறா…

ஆண் : காம்பசாட்டம் நானும் யே சுத்திதானே வாறேன்…
என்ன கண்டுகிட்டா போதும் நா கட்டிகிறேனே…

ஆண் : ஏய் புத்தகத்த பாத்தா வாந்தி எதுக்குறேன்…
அந்த பொண்ண பாக்க நாலு வேளை குளிக்கிறேன்…

ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறாடா…
யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டாடா…

—BGM—

ஆண் : தெருநாய்க்கும் தோஸ்தாகி போனேனே…
தேர் பாக்கா அவ பாத்து நின்னேனே…
ஆகாசம் அவளாகி போனேனே…
ராவெல்லாம் கூர்க்காவா நின்னேனே…

ஆண் : உள்ளுக்குள்ள பாரு ஒரு கலவரந்தான் போது…
தில்லு முல்லு வேல என் முன்னால ஏது…

ஆண் : பச்சரிசி பல்லு…
அட பண்ணருவா மூக்கு…
சில்வர்கெண்ட கண்ணு…
அவ செம்பருத்திடா…

ஆண் : அட பாம்பாட்டி போல என்ன படுத்துறா…
யே தூக்கத்தையே புடவையாட்டம் உடுத்துறா…

ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறாடா…
யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டாடா…

ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாளே…
யே கொள்ளத்தான் கொண்டுவந்த கண்ணாலே…

ஆண் : அந்த அச்சு வெல்லம் எனக்கு வேணும் அங்காளி…
அவள வச்சிக்கிட்டு வணங்க வேணும் பங்காளி…

ஆண் : யே வஞ்சி வந்தா போதும்…
அட கஞ்சி கூட வேணா…
யே பச்சை கிளி போதும்…
ஒரு பஞ்சு மெத்த வேணாம்…

ஆண் : ஏய் உப்பு கல்லு கூட இப்போ சக்கரையா போச்சு…
நா நிம்மதியா தூங்கி அட பத்து நாளு ஆச்சு…


Notes : Azhagana Sathigari Song Lyrics in Tamil. This Song from Rebel (2023). Song Lyrics penned by Ekadesi. அழகான சதிகாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading