sara-sara-saara-kathu-song-lyrics

சரசர சாரக்காத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசின்மயிஜிப்ரான்வாகை சூட வா

Sara Sara Saara Kathu Song Lyrics in Tamil


BGM

பெண் : சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…

பெண் : சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…

பெண் : இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க…
ஒத்த பார்வை பாத்து செல்லு…
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட…

பெண் : இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க…
ஒத்த பார்வை பாத்து செல்லு…
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட…

பெண் : டீ போல நீ…
என்னை ஏன் ஆத்துற…

பெண் : சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…

BGM

பெண் : எங்க ஊரு புடிக்குதா…
எங்கத் தண்ணி இனிக்குதா…
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா…

பெண் : முட்டக்கோழி புடிக்கவா…
மூணு படி சமைக்கவா…
எலும்புகள் கடிக்கையில் என்ன கொஞ்ச நினைக்கவா…

பெண் : கம்மஞ்சோறு ருசிக்கவா…
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா…
மொடக்கத்த ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறேன்…
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவக் காக்குறேன்…
முக்கண்ணு நொங்கு நான் நிக்கிறேன்…
மண்டு நீ கங்கம் ஏன் கேக்குற…

பெண் : சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…

BGM

பெண் : புல்லு கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுர…
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற…
கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல…
கையெழுத்து போடுற கன்னிப்பொண்ணு மார்புல…

பெண் : மூணு நாளா பாக்கல…
ஊரில் எந்த பூவும் பூக்கல…
ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போகும் பூனையா…
வந்து வந்து பார்த்துதான் கிறங்கி போறேன்யா…
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல மக்கு நீ…

பெண் : சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…

பெண் :சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…

பெண் : இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க…
ஒத்த பார்வை பாத்து செல்லு…
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட…

பெண் : இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க…
ஒத்த பார்வை பாத்து செல்லு…
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட…

பெண் : டீ போல நீ…
என்னை ஏன் ஆத்துற…

பெண் : காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா…
வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காய்ச்சலா…


Notes : Sara Sara Saara Kathu Song Lyrics in Tamil. This Song from Vaagai Sooda Vaa (2011). Song Lyrics penned by Vairamuthu. சரசர சாரக்காத்து பாடல் வரிகள்.