ஏதோ மோகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & கிருஷ்ணசந்திரன்இளையராஜாகோழி கூவுது

Edho Moham Edho Dhagam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏதோ…
குழு : ஆஅ… ஆ…
பெண் : மோகம்…
குழு : ஆஅ… ஆ…
பெண் : ஏதோ…
குழு : ஆஅ… ஆ…
பெண் : தாகம்…
குழு : ஆஅ… ஆ…

பெண் : நேற்று வரை நெனக்கலையே…
ஆசை விதை மொளைக்கலையே…
சேதி என்ன வனக்கிளியே…
குழு : ஆஅ… ஆ… ஆ…

ஆண் : ஏதோ மோகம் ஏதோ தாகம்…
ஆசை விதை மொளைக்கலையே…
சேதி என்ன வனக்கிளியே…
குழு : ஆஅ… ஆ… ஆ…

பெண் : ஏதோ மோகம் ஏதோ தாகம்…

—BGM—

பெண் : தாழம்பூவு ஈரமாச்சு…
தலையில் சூட நேரமாச்சு…
தாழம்பூவு ஈரமாச்சு…
தலையில் சூட நேரமாச்சு…

பெண் : சூடு கண்ட ஈர மூச்சு…
தோளைச் சுட்டு காயமாச்சு…
சூடு கண்ட ஈர மூச்சு…
தோளைச் சுட்டு காயமாச்சு…

ஆண் : பார்வையாலே நூறுப் பேச்சு…
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு…
பார்வையாலே நூறுப் பேச்சு…
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு…

ஆண் : போதும் போதும் காமதேவனே…
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே…

பெண் : ஏதோ…
குழு : ஆஅ… ஆ…
பெண் : மோகம்…
குழு : ஆஅ… ஆ…
பெண் : ஏதோ…
குழு : ஆஅ… ஆ…
பெண் : தாகம்…
குழு : ஆஅ… ஆ…

ஆண் : நேற்று வரை நெனக்கலையே…
ஆசை விதை மொளைக்கலையே…

பெண் : சேதி என்ன வனக்கிளியே…
குழு : ஆஅ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து…
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து…
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து…
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து…

ஆண் : தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து…
சாய்வதென்ன கண்கள் பூத்து…
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து…
சாய்வதென்ன கண்கள் பூத்து…

பெண் : அக்கம் பக்கம் சுத்திப் பாத்து…
தலைக்கு மேல தண்ணி ஊத்து…
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து…
தலைக்கு மேல தண்ணி ஊத்து…

பெண் : விடியச் சொல்லி கோழி கூவுது…
இந்த வேளையில் நெஞ்சு தாவுது…

ஆண் : ஏதோ…
குழு : ஆஅ… ஆ…
ஆண் : மோகம்…
குழு : ஆஅ… ஆ…
ஆண் : ஏதோ…
குழு : ஆஅ… ஆ…
ஆண் : தாகம்…
குழு : ஆஅ… ஆ…

ஆண் : நேற்று வரை நெனக்கலையே…
ஆசை விதை மொளைக்கலையே…
சேதி என்ன வனக்கிளியே…
குழு : ஆஅ… ஆ… ஆ…

பெண் : ஏதோ மோகம் ஏதோ தாகம்…
நேற்று வரை நெனக்கலையே…
ஆசை விதை மொளைக்கலையே…
சேதி என்ன வனக்கிளியே…

ஆண் : வனக்கிளியே…
பெண் : வனக்கிளியே…

—BGM—


Notes : Edho Moham Edho Dhagam Song Lyrics in Tamil. This Song from Kozhi Koovuthu (1982). Song Lyrics penned by Vairamuthu. ஏதோ மோகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading