காதல் வைபோகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிகங்கை அமரன்சுவர் இல்லாத சித்திரங்கள்

Kadhal Vaibhogame Song Lyrics in Tamil


ஆண் : காதல் வைபோகமே…
காணும் நன் நாள் இதே…
வானில் ஊர்கோலமாய்…
ஜோடி கிளிகள் கூடி இணைந்து…
ஆனந்த பண்பாடுமே…

ஆண் : காதல் வைபோகமே…
காணும் நன் நாள் இதே…
வானில் ஊர்கோலமாய்…
ஜோடி கிளிகள் கூடி இணைந்து…
ஆனந்த பண்பாடுமே…

—BGM—

பெண் : காதல் வைபோகமே…
காணும் நன் நாள் இதே…
வானில் ஊர்கோலமாய்…
ஜோடி கிளிகள் கூடி இணைந்து…
ஆனந்த பண்பாடுமே…

—BGM—

ஆண் : கோடை காலத்தில் தென்றல்…
குளிரும் பெளர்ணமி திங்கள்…
வாடை காலத்தில் கூடல்…
விளையாடல் ஊடல்…

—BGM—

பெண் : வானம் தாலாட்டுப் பாட…
மலைகள் பொன் ஊஞ்சல் போட…
நீயும் என் கையில் ஆட…
சுகம் தேட கூட…

ஆண் : பூவில் மேடையமைத்து…
பூவை உன்னை அணைத்தால்…

பெண் : கதகதப்பு துடிதுடிப்பு…
இது கல்யாண பரபரப்பு…

ஆண் : காதல் வைபோகமே…
காணும் நன் நாள் இதே…

பெண் : வானில் ஊர்கோலமாய்…
ஜோடி கிளிகள் கூடி இணைந்து…
ஆனந்த பண்பாடுமே…

—BGM—

பெண் : எண்ணம் என்னென்ன வண்ணம்…
இளமை பொன்னென்று மின்னும்…
எங்கும் ஆனந்த ராகம்…
புது தாகம் தாபம்…

—BGM—

ஆண் : மேகலை பாடிடும் ராகம்…
ராகங்கள் பாடிடும் தேகம்…
தேகத்தில் ஊறிய மோகம்…
சமபோகம் யோகம்…

பெண் : வாழ்ந்தால் உந்தன் மடியில்…
வளர்த்தால் உந்தன் அருகில்…

ஆண் : அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்…
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்…

பெண் : காதல் வைபோகமே…
காணும் நன் நாள் இதே…

ஆண் : வானில் ஊர்கோலமாய்…
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து…
ஆனந்த பண்பாடுமே…

—BGM—


Notes : Kadhal Vaibhogame Song Lyrics in Tamil. This Song from Suvarilladha Chiththirangal (1979). Song Lyrics penned by Kannadasan. காதல் வைபோகமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading