மலைராஜன் திருக்கோவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எம்.எல். எத்திராஜ்கே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Malairajan Thirukoil Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…

ஆண் : அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே…
அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே…
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே…
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே…

ஆண் : மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வாவென்று வரவேற்கும் ஐயன்மலை…
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை…
வாவென்று வரவேற்கும் ஐயன்மலை…
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை…

ஆண் : நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்…
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம்…
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம்…

ஆண் : மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…

BGM

ஆண் : ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே…
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே…
ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே…
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே…

ஆண் : நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே…
நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே…
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே…

ஆண் : மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…

BGM

ஆண் : நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்…
நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்…
நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்…
நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்…

ஆண் : அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி…
அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி…
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி…
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி…

ஆண் : மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…


Notes : Malairajan Thirukoil Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by M.L. Ethiraj. மலைராஜன் திருக்கோவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading