மாலை மங்கும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைரானினா ரெட்டிபிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Malai Mangum Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

பெண் : பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்…
தீயாய் மாறும் தேகம் தேகம்…
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்…
வாழ்வின் எல்லை தேடும் தேடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

BGM

பெண் : ஒரு வீட்டில் நாம் இருந்து…
ஓர் இலையில் நம் விருந்து…
இரு தூக்கம் ஒரு கனவில்…
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்…

பெண் : நான் சமையல் செய்திடுவேன்…
நீ வந்து அணைத்திடுவாய்…
என் பசியும் உன் பசியும்…
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்…

பெண் : நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு…
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்…
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்…
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM

பெண் : பால் சிந்தும் பௌர்ணமியில்…
நாம் நனைவோம் பனி இரவில்…
நம் மூச்சுக் காய்ச்சலில்…
இந்த பனியும் நடுங்கும்…

பெண் : வீடெங்கும் உன் பொருட்கள்…
அசைந்தாடும் உன் உடைகள்…
தனியாக நான் இல்லை…
என்றே சொல்லி சினுங்கும்…

பெண் : தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே…
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு…
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்…
வாசல் தூணாய் நானும் ஆனேன்…

பெண் : மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…

பெண் : காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன…
கடிகாரம் காட்டும் நேரம்…
அதை நம்ப மாட்டேன் நானும்…

BGM


Notes : Malai Mangum Neram Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Thamarai. மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading