moongil-kaadugale-song-lyrics

மூங்கில் காடுகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & திப்புஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Moongil Kaadugale Song Lyrics in Tamil


ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : சேற்று தண்ணீரில்…
மலரும் சிவப்பு தாமரையில்…
சேறும் மணப்பதில்லை…
பூவின் ஜீவன் மணக்கிறது…

ஆண் : வேரை அறுத்தாலும்…
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை…
அறுத்த நதியின் மேல்…
மரங்கள் ஆனந்த பூசொறியும்…

ஆண் : தாமரை பூவாய் மாறேனோ…
ஜென்ம சாபல் எங்கே காணேனோ…
மரமாய் நானும் மாறேனோ…
என் மனித பிறவியில் உய்யேனோ… ஓஓ…

ஆண் : வெயிலோ முயலோ…
பருகும் வண்ணம்…
வெள்ளை பனி துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
ஓஹோ… தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : உப்பு கடலோடு…
மேகம் உற்பத்தி ஆனாலும்…
உப்பு தண்ணீரை…
மேகம் ஒரு போதும் சிந்தாது…

ஆண் : மலையில் விழுந்தாலும்…
சூரியன் மறித்து போவதில்லை…
நிலவுக்கு ஒளியூட்டி…
தன்னை நீட்டித்து கொள்கிறதே…

ஆண் : மேகமாய் நானும் மாறேனோ…
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ…
சூரியன் போலவே மாறேனோ…
என் ஜோதியில் உலகை ஆளேனோ…

ஆண் : ஜனனம் மரணம் அறியா வண்ணம்…
நானும் மழை துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

BGM


Notes : Moongil Kaadugale Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் காடுகளே பாடல் வரிகள்.