கேளாமல் கையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரீராம் பார்த்தசாரதி & சைந்தவிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Kelamal Kaiyile Song Lyrics in Tamil


பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…

BGM

பெண் : கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…

பெண் : என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…
என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

BGM

ஆண் : இனிமேல் இனி மேல் இந்த…
நானும் நான் இல்லை…
போய் வா போய் வா என்றே…
எனக்கே விடைகள் தந்தேன்…

பெண் : மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்…
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்…
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்…
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்…

ஆண் : கூந்தல் என்னும் ஏணி ஏறி…
முத்தமிட ஆசைகள் உண்டு…

பெண் : நெற்றி மூக்கு உதடு என்று…
இறங்கி வர படிகளும் உண்டு…

ஆண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…

பெண் : பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : ஏதோ நடக்கின்றதே…
குதித்து போவதேன் நில்லுங்களேன்…
பார்த்தும் பாராமலே…
போகும் மேகங்களே…

பெண் : கண்ணை கண்ணை சிமிட்டும்…
நொடியில் உன் உருவம்…
மறையும் மறையும்…
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்…

ஆண் : பார்வை ஒன்றால் உன்னை அள்ளி…
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்…
அதில் நிரந்தரமாய் நீ இருக்க…
இமைகள் வேண்டும் என்பேன்…

பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்…
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ…

ஆண் : தூங்கும் தேவை ஏதும் இன்றி…
கனவுகளும் கைகளில் விழுமா…

பெண் : கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் ராமன் நீ எனில்…
உன் கையில் நான் அணில்…

ஆண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…

பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம்…
நெஞ்சிலே காதலின் கால் தடம்…


Notes : Kelamal Kaiyile Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Thamarai. கேளாமல் கையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading