mazhai-thuli-song-lyrics-in-tamil-sangamam

மழைத்துளி மழைத்துளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & எம்.எஸ்.விஸ்வநாதன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Mazhai Thuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

BGM

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா…
வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க…

ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட…
உன் காலடிக்கு முதல் வணக்கம்…
என் கால் நடமாடுமையா…
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்…

ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட…
உன் காலடிக்கு முதல் வணக்கம்…
என் கால் நடமாடுமையா…
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்…

ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும்…
அட இல்லை இல்லை என்றபோதும்…
சபை ஆடிய பாதமிது…
நிக்காது ஒருபோதும்…

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா…
வணக்கமுங்க… வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க… வணக்கமுங்க…

BGM

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

BGM

ஆண் : தண்ணியில மீன் அழுதா…
கரைக்கொரு தகவலும் வருவதில்ல…
எனக்குள்ள நான் அழுதா…
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல…

ஆண் : என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும்…
வைரம் வைரம் ஆகுமே…
சபதம் சபதம் என்றே…
சலங்கை சலங்கை பாடுமே…

BGM

ஆண் : மனமே மனமே…
சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு…
விழியே விழியே…
இமையே தீயும்போதும் கலங்காதிரு…

ஆண் : நதி நதி அத்தனையும்…
கடலில் சங்கமம்…
நட்சத்திரம் அத்தனையும்…
பகலில் சங்கமம்…
கலைகளின் வெகுமதி…
உன்னிடத்தில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா…
வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க…

BGM

ஆண் : மழைக்காகத்தான் மேகம்…
அட கலைக்காகத்தான் நீயும்…
உயிா் கலந்தாடுவோம் நாளும்…
மகனே வா…

ஆண் : நீ சொந்தக்காலிலே நில்லு…
தலை சுற்றும் பூமியை வெல்லு…
இது அப்பன் சொல்லிய சொல்லு…
மகனே வா… மகனே வா…

ஆண் : ஊருக்காக ஆடும் கலைஞன்…
தன்னை மறப்பான்…
தன் கண்ணீரை மூடிக்கொண்டு…
இன்பம் கொடுப்பான்…

ஆண் : புலிகள் அழுவது ஏது…
அட பறவையும் அழ அறியாது…

ஆண் : போா்களம் நீ புகும்போது…
முள் தைப்பது கால் அறியாது…
மகனே… மகனே…

ஆண் : காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது…
கலைக்கொரு தோல்வி கிடையாது… கிடையாது…

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க…

ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட…
உன் காலடிக்கு முதல் வணக்கம்…
என் கால் நடமாடுமையா…
நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்…

ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும்…
அட இல்லை இல்லை என்றபோதும்…
நீ உண்டு உண்டு என்ற போதும்…
அட இல்லை இல்லை என்றபோதும்…

ஆண் : சபை ஆடிய பாதமிது…
நிக்காது ஒருபோதும்…

ஆண் : ( மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்… ) *6


Notes : Mazhai Thuli Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. மழைத்துளி பாடல் வரிகள்.