Kadhale-Kadhale-Song-Lyrics-Indru-Netru-Naalai

காதலே காதலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஷங்கர் மகாதேவன் & பத்மலதாஹிப் ஹாப் தமிழாஇன்று நேற்று நாளை

Kadhale Kadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலே காதலே என்னை உடைத்தேனே…
என்னில் உன்னை அடைத்தேனே…
உயிர் கட்டி இணைத்தேனே…

ஆண் : நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே…
இமை கட்டு அவிழ்த்தேனே…
துயர் மட்டும் மறைத்தேனே…

பெண் : நிழல் ஆடும் நினைவில் ரெண்டு…
களவாடி தருவேன் இன்று…
கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன்…

பெண் : உன்னை காண உலகம் சென்று…
அங்கேயும் இதயம் தந்து…
புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்…

ஆண் : இன்று நேற்று நாளை…
என்றும் நீ என் தேவதை…
காதல் செய்யும் மாயை…
என் வானம் எங்கும் பூ மழை…

BGM

பெண் : மனதோடு மட்டும் இங்கு…
உறவாடும் நேசம் ஒன்று…
உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே…

பெண் : படியேறி கீழே செல்லும்…
புரியாத பாதை ஒன்று…
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே…

பெண் : காலம் கடந்தாலும்…
மழை நீரை போலே நேரம்…
கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே…

பெண் : கடிகாரம் வாங்க போனால்…
அந்த நேரம் வாங்கி தந்தாய்…
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே…

BGM

ஆண் : இன்று நேற்று நாளை…
என்றும் நீ என் தேவதை…
காதல் செய்யும் மாயை…
என் வானம் எங்கும் பூ மழை…

BGM


Notes : Kadhale Kadhale Song Lyrics in Tamil. This Song from Indru Netru Naalai (2015). Song Lyrics penned by Vivek. காதலே காதலே பாடல் வரிகள்.