வெள்ளை பூக்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.ஜெயச்சந்திரன்ஏ.ஆர்.ரகுமான்கன்னத்தில் முத்தமிட்டால்

Vellai Pookal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…

ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…

—BGM—

ஆண் : காற்றின் பேரிசையும்…
மழை பாடும் பாடல்களும்…
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ…

ஆண் : கோடி கீர்த்தனையும்…
கவி கோர்த்த வார்தைகளும்…
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ…
ஆஹாஹா… ஆஹாஹா…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…

ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

—BGM—

ஆண் : எங்கு சிறு குழந்தை…
தன் கைகள் நீட்டிடுமோ…
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே…

ஆண் : எங்கு மனித இனம்…
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ…
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…

ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…


Notes : Vellai Pookal Song Lyrics in Tamil. This Song from Kannathil Muthamittal (2002). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளை பூக்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading