தீவானா தீவானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம்பரத்வாஜ்ஜெமினி

Deewana Deewana Song Lyrics in Tamil


BGM

பெண் : தீவானா தீவானா…
நெற்றி நனைத்தவன் நீதானா…
தீவானா ஓ தீவானா…
நெஞ்சை பிழிந்தவன் நீதானா…

பெண் : என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து…
தன்காதல் சொல்லும் மாயக்கண்ணனா…

பெண் : தீவானா ஓ தீவானா…
நெற்றி நனைத்தவன் நீதானா…

BGM

பெண் : வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்…
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே…
கீச்சு கீச்சென்று கூச்சல் போடுதே…
நெஞ்சுக்கூட்டில் கூடு கட்ட மல்லுக்கட்டுதே…

பெண் : சும்மா அது கத்திச் செல்லுமோ…
இல்லை எம்மா நெஞ்சை கொத்திச் செல்லுமோ…

பெண் : அன்னை தந்தையை ஆசை தோழியை…
காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே…
தூக்கம் விற்றுதான் காதல் வாங்கினாய்…
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே…

பெண் : அய்யோ இன்னும் என்னவாகுமோ…
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமோ…

பெண் : மிலே ஏக் அஜ்னபி கிசே…
கோயி ஆகே நா பீச்சே…
தும் ஹி கி கோ க்யா பாத் ஹை…

பெண் : தீவானா ஓ தீவானா…
நெற்றி நனைத்தவன் நீதானா…

BGM

பெண் : காதல் எண்ணமே அய்யோ அசிங்கமே…
என்று கண்கள் காது மூக்கு பொத்திக் கொண்டவள்…
காதல் காலடி ஓசை கேட்டதும்…
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டன…

பெண் : காதல் உள்ளே வந்துவிட்டது…
எந்தன் நாணம் வெளியே சென்றுவிட்டது…

பெண் : தோழி ஒருத்தியை நேரில் நிறுத்திநான்…
காதலுற்ற சேதி சொல்ல நெஞ்சம் முட்டுதே…
ஆனால் நாவிலே ஆனா ஆவன்னா…
ரெண்டெழுத்தை தவிர வேறு வார்த்தை இல்லையே…

பெண் : ஆசை வந்து தத்தளிக்கிறேன்…
என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்…

பெண் : மிலே ஏக் அஜ்னபி கிசே…
கோயி ஆகே நா பீச்சே…
தும் ஹி கி கோ க்யா பாத் ஹை…

பெண் : தீவானா தீவானா…
நெற்றி நனைத்தவன் நீதானா…
தீவானா ஓ தீவானா…
நெஞ்சை பிழிந்தவன் நீதானா…

பெண் : என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து…
தன்காதல் சொல்லும் மாயக்கண்ணனா…

பெண் : தீவானா தீவானா…
நெற்றி நனைத்தவன் நீதானா…


Notes : Deewana Deewana Song Lyrics in Tamil. This Song from Gemini (2002). Song Lyrics penned by Vairamuthu. தீவானா தீவானா பாடல் வரிகள்.