உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிரீட்டா & மணிசர்மாமணி சர்மாமலைக்கோட்டை

Uyire Uyire Song Lyrics in Tamil

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

ஆண் : உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…
உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…

—BGM—

ஆண் : உன் பட்டு கன்னம் புத்தகம்…
அதில் உதடுகள் எழுதுவதெப்படி…
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா…
அது பகலிலும் ஒளிர்வது எப்படி…

ஆண் : உன் வீதி சேர்ந்ததும் வருகிற பதட்டம்…
குறைப்பது குறைப்பது எப்படி…
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்…
வருவது வருவது எப்படி…

ஆண் : என் வாழ்க்கையா என் வேட்கையா…
ரெண்டாகவும் தெரிந்தாயே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

—BGM—

ஆண் : உன் எச்சில் முத்தம் சம்மதம்…
அது தினசரி தொடர சம்மதம்…
உன் உச்சுகொட்டல் சம்மதம்…
அது உயிர் குழி பறிக்க சம்மதம்…

ஆண் : உன் காதின் ஓரமாய் புரளும் முடி போல்…
கலைய கோடி சம்மதம்…
உன் ஈர சேலையில் வழியும் துளி போல்…
உருள நானும் சம்மதம்…

ஆண் : இனி என் ஞாபகம் உன் பூ முகம்…
கண்டி போலே எனை காட்டும்…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. உயிரே உயிரே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading