தேவதையே வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ்மணி சர்மாமலைக்கோட்டை

Devathaye Va Va Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…

ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…

ஆண் : நீரிளில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவினில் எழுதிடும் கவிதை நான்…

—BGM—

ஆண் : விளையும் பூமி தண்ணீரை விலக சொல்லாது…
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது…
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது…
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது…

ஆண் : பாதை தேடும் கால்கள்தான் ஊரை சேரும்…
குழலை சேரும் தென்றல்தான் கீதம் ஆகும்…

ஆண் : சுற்றும் இந்த பூமியை சுழல செய்த காதலை…
கற்று கொண்டேன் உன்னிடம்…
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை…

—BGM—

ஆண் : அடைமழை நம்மை தொட்டாலே…
வெயிலே வா என்போம்…
அனலாய் வெயில் சுட்டாலே…
மலையே தூவென்போம்…

ஆண் : தனிமைகள் தொல்லை தந்தாலே…
துணையை கேட்கின்றோம்…
துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்…
தனியே தேய்கின்றோம்…

ஆண் : ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்…
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்…

ஆண் : கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே…
அன்பை வைத்து வாழலாம்…
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு…

ஆண் : தேவதையே வா வா என் தேவதையே வா வா…
உன் இரு விழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்…

ஆண் : பூமாலையே வா வா என் பூமாலையே வா வா…
உன் விரல் தொடும் தொலைவினும் விழுகிற அருவி நான்…

ஆண் : நீரில்லாமல் மீன்களும்…
வேரில்லாமல் பூக்களும்…
பாவம்தானே பூமியில்…
சிலுவையிலும் சிறகென பறந்திடும்…


Notes : Devathaye Va Va Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. தேவதையே வா வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading