கிழக்கே பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுகேந்திரன் & ஃபோனிபரத்வாஜ்ஆட்டோகிராப்

Kizhakke Paarthen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

ஆண் : தோழி உந்தன் வருகையால்…
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி…
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : வெல் மை பிரண்டு ஐ ஹேவ் சம்திங் டு சே…
ஐ வான்ட் யு டு லிஸ்ஸன் லிஸ்ஸன் டு மீ…
திஸ் இஸ் வாட் ஐ ஹேவ் டு சே…
ஹியர் இட் கோஸ்…

—BGM—

ஆண் : தாகம் என்று சொல்கிறேன்…
மரக் கன்று ஒன்றை தருகிறாய்…
பசிக்குது என்று சொல்கிறேன்…
நெல்மனி ஒன்றை தருகிறாய்…

ஆண் : உந்தன் கை விரல் பிடிக்கையில்…
புதிதாய் நம்பிக்கை பிறக்குது…
உந்தன் கூட நடக்கையில்…
ஒன்பதாம் திசையும் திறக்குது…

ஆண் : என் பயணத்தில் எல்லாம்…
நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய்…
என் மனதை உழுது…
நீ நல்ல விதைகளை விதைத்தாய்…

ஆண் : என்னை நானே செதுக்க…
நீ உன்னையே உளியாய் தந்தாய்…
என் பலம் என்னவென்று எனக்கு…
நீ இன்றுதான் உணர வைத்தாய்…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

—BGM—

ஆண் : மழையோ உந்தன் புன்னகை…
மனசெல்லாம் மெல்ல நனையுதே…
பனியோ உந்தன் பார்வைகள்…
என் கண்ணிமை மயிர்களில் தூங்குதே…

—BGM—

ஆண் : வேருக்குள் விழுந்த நீர் துளி…
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே…
உனக்குள் ஏற்படும் உற்சவம்…
என்னையும் குதூகலப் படுத்துதே…

ஆண் : தோழி ஒருத்தி கிடைத்தால்…
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்…
இதுவரை இந்த உண்மை…
ஏன் தெரியவில்லை எவர்க்கும்…

ஆண் : மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை…
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி…
படைத்தவன் கேட்டால் கூட…
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

ஆண் : தோழி உந்தன் வருகையால்…
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி…
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…


Notes : Kizhakke Paarthen Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. கிழக்கே பார்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading