நிழலினை நிஜமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்விஜய் யேசுதாஸ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாராம்

Nizhalinai Nijamum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

—BGM—

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

—BGM—

ஆண் : நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க…
விதி செய்த சதியா தெரியலம்மா…
கடல் தூக்கும் அலையும் கடலில்தான் சேரும்…
அது போல என்னையும் சேத்துக்கம்மா…

ஆண் : உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது…
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்…
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா…
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா…
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா…
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா… ஆ…

—BGM—

ஆண் : திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு…
எங்கேயோ பயணம் தொடருதம்மா…
என்னோட மனசும் பழுதாகி போச்சு…
சரி செய்ய வழியும் தெரியலம்மா…

ஆண் : சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா…
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா…
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா…
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா…
தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா…
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா…

—BGM—

ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…

—BGM—


Notes : Nizhalinai Nijamum Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. நிழலினை நிஜமும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading