இந்த நிமிஷம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராதேவாஹலோ

Indha Nimisham Song Lyrics in Tamil


BGM

ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம்…
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்…

ஆண் : பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்…
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்…
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்…
வாசனை வீசும் பூ நிமிஷம்

ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம்…
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : இப்படியே இப்படியே இருந்து விட கூடாதா…
என் கண்ணில் உன் இமைகள் பொருந்தி விட கூடாதா… ஆஹா…

பெண் : இப்படியே இப்படியே இறந்து விட கூடாதா…
இப்படியே காலங்கள் உறைந்து விட கூடாதா…

ஆண் : வெட்டவெளி பூ வனமாய் மலர்ந்து விட கூடாதா…
விண்மீன்கள் நிலவாக வளர்ந்து விட கூடாதா…

பெண் : அன்பே உன் பக்கத்தில்…
அணைக்கின்ற வெப்பத்தில்…
உயிருள்ள காலம் வரை ஓடாதா கூடாதா…

ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம்…
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்…

BGM

பெண் : நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டு போகாதே…
என் உயிரை தீ குழியில் எரிந்து விட்டு போகாதே… ஆஹா…

ஆண் : பல்லவியே பல்லவியே பாடல் விட்டு போகாதே…
வாசல் வரை வந்த நதி வற்றி விட கூடாதே…

பெண் : மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிட கூடாதே…
மார்போடு உன் சூடு ஆறிவிட கூடாதே…

ஆண் : அன்பே உன் கண் சிந்தும் ஆனந்த கண்ணீரில்…
என்னோடு என் உயிரும் கரைந்து விடல் ஆகாதா…

ஆண் : இந்த நிமிஷம் என் நிமிஷம்…
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்…

ஆண் : பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்…
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்…
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்…
வாசனை வீசும் பூ நிமிஷம்…

ஆண் : இந்த நிமிஷம் ஆஹா என் நிமிஷம்…
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்… ஆஆ… ஆஆ…

BGM


Notes : Indha Nimisham Song Lyrics in Tamil. This Song from Hello (1999). Song Lyrics penned by Vairamuthu. இந்த நிமிஷம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading