Category Archives: குட்லக்

குட்லக் – Good Luck (2000)

இதோ இந்த நெஞ்சோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

Itho Intha Nenjodu Song Lyrics in Tamil


குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…

பெண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

BGM

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்…
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்…

பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்…
எனது உயிரில் முழுமையும் தந்தேன்…

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று…
விஞ்ஞானம் சொல்லும்…
நம் காதல் முடியாதென்று…
எஞ்ஞானம் சொல்லும்…

பெண் : காலங்கள் வாழும் காலமே… ஏ…
நம் காதல் எல்லை வாழுமே…

ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே… ஏ…
இமைக்காமல் உன்னை ஆளுமே… ஏ…

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

பெண் : பஸநி ரிரிரி…
ஆண் : ஸரிஸ ககக…
ஆண் & பெண் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி…
கமநித பநி கரிஸா…

BGM

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்…
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்…

ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்…
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்…

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்…
உன் மார்பு போதும்…
உயிர் போகும் காலம் கூட…
ஒரு பார்வை போதும்…

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்…
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்…

பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்…
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…

ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
ஆண் & பெண் : என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…


Notes : Itho Intha Nenjodu Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதோ இந்த நெஞ்சோடு பாடல் வரிகள்.


இதயம் துடிக்கிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. பிரபாகரன், கே.எஸ். சித்ரா & பேபி தீபிகாமனோஜ் பட்நாகர்குட்லக்

Idhayam Thudikkirathe Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே… } * (3)

பெண் : காதல் கடலில் நான்தானே…
ஊமை தீவாய் ஆனேனே…
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே…
உயிர் வாழ்கிறேன்…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

BGM

ஆண் : நிலவோடு இங்கே விளையாட வந்தேன்…
பிறை போதும் என்றே உறவாடுகின்றேன்…

பெண் : எனக்கான மேகம் இங்கே திசை மாறுதே…
இமை மீறும் கண்ணீர் என்னை விலை பேசுதே…

ஆண் : அணை போட்டும் நெஞ்சில்…
அலை வீசக் கண்டேன்…

பெண் : தரை மீது மீனைப் போலே…
தடுமாறினேன்…

ஆண் : சின்னக் குயிலை தாலாட்டும்…
நெஞ்சில் மௌன போராட்டம்…

பெண் : நானோ உள்ளங்கையில் தண்ணீர் கேட்டு…
உன்னைப் பார்க்கிறேன்…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

BGM

பெண் : ஊரெங்கும் தெய்வம்…
சிலையாக கண்டேன்…
எனக்கான தெய்வம் நடமாட கண்டேன்…

ஆண் : குயில் பாட்டு என்னை வந்து குளிப்பாட்டுதே…
நிழல் கேட்டு வந்த சொந்தம் உயிர் மீட்குதே…

பெண் : உயிரோடு இங்கே உனை சூடிக்கொண்டேன்…
ஆண் : இதயத்தில் தீபம் போல உனை ஏற்றினேன்…

பெண் : நெஞ்சில் தொட்டில் கொடுத்தாய்…
கண்ணில் பொத்தி வளர்த்தாய்…

ஆண் : நாளை நீயும் நானும் நிலா போல…
கனா காண்கிறேன்…

பெண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

ஆண் : இதயம் துடிக்கிறதே…
தாளம் கிடைக்கிறதே…
பாடல் பிறக்கிறதே…
பாசம் மலர்கிறதே…

ஆண் : காதல் கடலில் நான்தானே…
ஊமை தீவாய் ஆனேனே…
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே…
உயிர் வாழ்கிறேன்…

ஆண் : இதயம்…
பெண் : துடிக்கிறதே…
ஆண் : தாளம்…
பெண் : கிடைக்கிறதே…

ஆண் : பாடல்…
பெண் : பிறக்கிறதே…
பெண் & ஆண் : பாசம் மலர்கிறதே…


Notes : Idhayam Thudikkirathe Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதயம் துடிக்கிறதே பாடல் வரிகள்.


ஜூலை பதினாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

July Pathinaaru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…
கன்னம் என் கன்னம் கண்டால்…
வயது பதினாலுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ… ஓஓஓஓஹ்…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ… ஓஓஓஓஹ்…

BGM

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்…
காதல்தான் என்னை காணவில்லை…
காதல்தான் தேர்வில்லாத பள்ளி…
கல்லாமல் நானும் போவதில்லை…

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே…
என் கண்கள் பூத்தாடுதே…
அந்த பொன் நாளும் கை கூடவே…
என் மார்பு கூத்தாடுதே…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ…

BGM

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்…
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்…
பொய் காதல் தன்னை மட்டும் காணும்…
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்…

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே…
என் காதல் நான் தேடுவேன்…
அது நிறைவேறும் திருநாளிலே…
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன்… ஏஹ் ஏஹ்…

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ…

BGM


Notes : July Pathinaaru Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. ஜூலை பதினாறு பாடல் வரிகள்.


நானே நீ நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்மனோஜ் பட்நாகர்குட்லக்

Naane Nee Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : நானே நீ நீ நீ…
நீதானே நான் நான் நான்…
பேதங்கள் ஏன் ஏன் ஏன்
ஒன்றானோம் வா…

பெண் : கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…
கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…

ஆண் : ஆகாய மேகங்கள் மேகங்கள் மேளம் கொட்டட்டும்…
அன்பே ஒரு பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்…

ஆண் : கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…
கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…

BGM

ஆண் : வானவில் மேடையில் ஏழுதான் வண்ணங்கள்…
ஏழயும் மீறியே மின்னுதே கன்னங்கள்…

பெண் : வெய்யில் படா இடத்திலும் முத்தத்தின் சின்னங்கள்…
இத்தனை ஆசைகள் என்னமோ பண்ணுங்கள்…

ஆண் : மண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று…
கண்ணோடு தோன்றாதடி…
பெண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று…
என் கண்கள் சொல்லுமடி…

பெண் : நீ தேடாத பாகம் ஏராளம் உண்டு…
காலங்கள் சொல்லித் தரும்…

ஆண் : நானே நீ நீ நீ…
நீதானே நான் நான் நான்…
பேதங்கள் ஏன் ஏன் ஏன்…
ஒன்றானோம் வா…

பெண் : ம்ம்ம்… கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…
கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…

BGM

பெண் : கண்களை கண்களால் கவ்வினால் ஓரின்பம்…
கைகளால் காதலை தூண்டினால் பேரின்பம்…

ஆண் : செவ்விதழ் ரெண்டுமே சேர்வதோ சிற்றின்பம்…
ஜீவனும் ஜீவனும் சேர்வதோ பேரின்பம்…

பெண் : காதல் உதடு வந்து காதல் பேசுகையில்…
கண்ணோடு இன்பம் சுகம்…
அந்த நிமிடங்களில் இந்த உதடுகளில்…
சூடான முத்தம் சுகம்…

ஆண் : நான் பெண்ணாக நீயும் ஆணாக…
ஆஹா என்னென்ன காதல் சுகம்…

பெண் : நானே நீ நீ நீ…
ஆண் : நீதானே நான் நான் நான்…
பெண் : பேதங்கள் ஏன் ஏன் ஏன்…
ஒன்றானோம் வா…

ஆண் : கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…
கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…

பெண் : ஆகாய மேகங்கள் மேகங்கள் மேளம் கொட்டட்டும்…
ஆண் : அன்பே ஒரு பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்…

ஆண் & பெண் : கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…
கல்யாணம் காண்போம்…
கச்சேரி காண்போம்…


Notes : Naane Nee Nee Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. நானே நீ நீ பாடல் வரிகள்.


காதல் செய்யும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மனோஜ் பட்நாகர்குட்லக்

Kadhal Seiyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஹோ குட்லக்…

பெண் : காலை பூத்த பூக்களுக்கெல்லாம்…
நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம் குட்லக் ஓஹோ குட்லக்…

ஆண் : ஹே… வானமே வானமே பூமிக்கு குட்லக் சொல்லி விடு…
பெண் : ஹே பூமியே பூமியே வானுக்கு குட்லக் சொல்லி விடு…

ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
பெண் : காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்…
ஆண் : குட்லக் ஓஹோ குட்லக்…
ஆண் & பெண் : குட்லக் ஓஹோ குட்லக்…

BGM

ஆண் : மழை கொண்ட நீர்த்துளி எல்லாம்…
சிப்பியோடு சேர்வதும் இல்லை…

பெண் : சிப்பி கண்ட நீர்த்துளி எல்லாம்…
முத்தென்று ஆவது இல்லை…

ஆண் : நீர்த்துளி சிப்பியில் சேரட்டும்…
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்…

BGM

பெண் : சீக்கிரம் முத்து திரளட்டும்…
சிப்பிக்கு குட்லக் சொல்லுங்கள்…

BGM

ஆண் : தென்றலே தென்றலே சோலைக்கு குட்லக் சொல்லி விடு…
பெண் : திங்களே திங்களே அல்லிக்கு குட்லக் சொல்லி விடு…

பெண் : காலை பூத்த பூக்களுக்கெல்லாம்…
நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம் குட்லக் வெரி வெரி குட்லக்…

பெண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஹோ குட்லக்…

BGM

பெண் : குளிர்காலம் வந்ததும் கொஞ்சம்… லாலா…
உன் மார்பு தேடுது நெஞ்சம்…

ஆண் : மழைக்காலம் வந்ததும் கொஞ்சம்… ஓஓஹோ…
உன் மடி தேடி கெஞ்சுது நெஞ்சம்…

பெண் : மடியே குடையாய் மாறட்டும்…
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்…

BGM

ஆண் : மார்பு சூடு கிடைக்கட்டும்…
குளிருக்கு குட்லக் சொல்லுங்கள்…

BGM

பெண் : காதலா காதலா அன்புக்கு குட்லக் சொல்லிவிடு…
ஆண் : ஹே காதலி காதலி காளைக்கு குட்பை சொல்லிவிடு…

ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்…
ஆண் & பெண் : குட்லக் ஓஹோ குட்லக்…
குட்லக் ஓஹோ குட்லக்…

BGM


Notes : Kadhal Seiyum Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. காதல் செய்யும் பாடல் வரிகள்.