காதல் செய்யும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மனோஜ் பட்நாகர்குட்லக்

Kadhal Seiyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஹோ குட்லக்…

பெண் : காலை பூத்த பூக்களுக்கெல்லாம்…
நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம் குட்லக் ஓஹோ குட்லக்…

ஆண் : ஹே… வானமே வானமே பூமிக்கு குட்லக் சொல்லி விடு…
பெண் : ஹே பூமியே பூமியே வானுக்கு குட்லக் சொல்லி விடு…

ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
பெண் : காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்…
ஆண் : குட்லக் ஓஹோ குட்லக்…
ஆண் & பெண் : குட்லக் ஓஹோ குட்லக்…

—BGM—

ஆண் : மழை கொண்ட நீர்த்துளி எல்லாம்…
சிப்பியோடு சேர்வதும் இல்லை…

பெண் : சிப்பி கண்ட நீர்த்துளி எல்லாம்…
முத்தென்று ஆவது இல்லை…

ஆண் : நீர்த்துளி சிப்பியில் சேரட்டும்…
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்…

—BGM—

பெண் : சீக்கிரம் முத்து திரளட்டும்…
சிப்பிக்கு குட்லக் சொல்லுங்கள்…

—BGM—

ஆண் : தென்றலே தென்றலே சோலைக்கு குட்லக் சொல்லி விடு…
பெண் : திங்களே திங்களே அல்லிக்கு குட்லக் சொல்லி விடு…

பெண் : காலை பூத்த பூக்களுக்கெல்லாம்…
நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம் குட்லக் வெரி வெரி குட்லக்…

பெண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஹோ குட்லக்…

—BGM—

பெண் : குளிர்காலம் வந்ததும் கொஞ்சம்… லாலா…
உன் மார்பு தேடுது நெஞ்சம்…

ஆண் : மழைக்காலம் வந்ததும் கொஞ்சம்… ஓஓஹோ…
உன் மடி தேடி கெஞ்சுது நெஞ்சம்…

பெண் : மடியே குடையாய் மாறட்டும்…
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்…

—BGM—

ஆண் : மார்பு சூடு கிடைக்கட்டும்…
குளிருக்கு குட்லக் சொல்லுங்கள்…

—BGM—

பெண் : காதலா காதலா அன்புக்கு குட்லக் சொல்லிவிடு…
ஆண் : ஹே காதலி காதலி காளைக்கு குட்பை சொல்லிவிடு…

ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்…
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்…
ஆண் & பெண் : குட்லக் ஓஹோ குட்லக்…
குட்லக் ஓஹோ குட்லக்…

—BGM—


Notes : Kadhal Seiyum Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. காதல் செய்யும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading