உளுந்து வெதக்கையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதா & ஸ்ரீனிவாஸ்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Ulundhu Vithakkaiyilae Song Lyrics in Tamil


—BGM—

{ பெண் : உளுந்து வெதக்கையிலே…
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே…
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு…
ஆத்துமேடு தாண்டிப் போனேன்…
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்…
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்… } * (2)

பெண் : வெக்கப்படப்பில் கவுளி கத்த…
வலது பக்கம் கருடன் கொத்த…
தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும்…
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே…

பெண் : ஒரு பூக்காாி எதுக்க வர…
பசும் பால்மாடு கடக்கிறதே…
இனி என்னாகுமோ ஏதாகுமோ…
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ…

பெண் : உளுந்து வெதக்கையிலே…
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே…
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு…
ஆத்துமேடு தாண்டிப் போனேன்…
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்…
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்…

—BGM—

ஆண் : { அனிச்ச மலரழகே…
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே…
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி…
காதுக்குள்ள கூவும் குயிலே…
நீ எட்டியெட்டிப் போகயில…
விட்டுவிட்டுப் போகும் உயிரே… } * (2)

—BGM—

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : உன் முதுகு தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் மறு பாா்வை…
உடம்பு மண்ணில் புதையற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிா் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் சேவனே நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா…

ஆண் : குருக்கு சிறுத்தவளே…
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிா் கசிய…
ஒன்னால சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குருக்கு சிறுத்தவளே…
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
பெண் : உன்னக் கொஞ்சம் பூசுவாயா…

ஆண் : உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்…
பெண் : மாத்துவாயா…

—BGM—


Notes : Ulundhu Vithakkaiyilae Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. உளுந்து வெதக்கையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading