குறுக்கு சிறுத்தவளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Kurukku Chiruththavale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே…
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே…

ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே…
ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே…

பெண் : வாயி மேல வாய வச்சு…
வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட…
விரல வச்சு அழுத்திய கழுத்துல…
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல…

ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல…
கணுக்கால் கூட கருப்பு இல்ல…
நீ தீண்டும் இடம் தித்திக்குமே…
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் ஒரு பார்வை…
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிர் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் ஜீவனில் நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…

பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன்யா…

ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம்…

பெண் : மாத்துவேன்யா…

ஆண் : ஒஹோ… ஓஓஓ…
ஒஹோ… ஓஓஓ…

பெண் : ஆஆ… ஆஆஆ…
ஆஆ… ஆஆஆ…


Notes : Kurukku Chiruththavale Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. குறுக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading