ஒவ்வொரு பாடலிலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Ovvoru Padalilum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…

—BGM—

ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே…

ஆண் : காதலின் கனவுகளை கண்ணீாின் நினைவுகளை…
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே…

ஆண் : ஓஹோஹோ… வெட்டோடு பொருந்தும் வாா்த்தை…
எதுவென்று தாய்மொழி அறியும்…
நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை…
எதுவென்று யாருக்கு தொியும்…
வலி போக எந்தன் பாடல் வாா்த்தை கொண்டு வரும்…

ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…

—BGM—

ஆண் : யாருக்கு மாலைகள் ஆவதென்று…
பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை…

—BGM—

ஆண் : யாருக்கு யாா் சொந்தம் ஆவதென்று…
தேவதைகள் வந்து சொல்வதில்லை…

ஆண் : விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே…
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு…

ஆண் : எண்ணம் போல வாழ்க்கையே…
எவருக்கும் வாய்ப்பதில்லை…
வாழ்க்கை போலே எண்ணம் கொள்…
வாழ்வதும் துயரமில்லை…

ஆண் : ஓஹோஹோ… ரோஜாவின் கண்ணீா்தானே…
அத்தராய் வாசம் கொள்ளும்…
கண்ணோடு பொறுமை காத்தால்…
காலம் பதில் சொல்லும்…

ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…

—BGM—

ஆண் : பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம்…
தேகங்களை நம்பி வாழ்வதில்லை…

—BGM—

ஆண் : உயிா் கொண்ட வோ்களின் ஆழங்களில்…
காதல் அன்பு என்றும் காய்வதில்லை…

ஆண் : உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே…
அண்டம் மறையும் அன்பே நித்தியமே…

ஆண் : எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு…
ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு…

ஆண் : ஓஹோஹோ… நீா் கொண்ட மஞ்சள் வாழ்க…
நிழல் தந்த சொந்தம் வாழ்க…
கல்யாண மாலை நனைத்த கண்ணீா்துளி வாழ்க…

ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே…


Notes : Ovvoru Padalilum Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. ஒவ்வொரு பாடலிலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading