சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கிருஷ்ணராஜ்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil


குழு : சையா சக்கா சையா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

—BGM—

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

—BGM—

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

—BGM—

ஆண் : எந்த பூவிலும் தேன் துளி உண்டு…
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு…
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை…

—BGM—

ஆண் : இருட்டை பார்த்து மலைப்பது மடமை…
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை…
ஆதவன் செய்யும் பேரை தன்னை…
அகலும் செய்து விடும்…

ஆண் : மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்…
பட்டாம்பூச்சி அழுவது கிடையாது…
உன் நெஞ்சிலே சாந்தி கொள்…
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது…

ஆண் : வாழும் ஆளை சார்ந்தது…
வாழ்க்கை என்பது…

—BGM—

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

—BGM—

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சையா சக்கா சை…

ஆண் : பூத்து சிரிக்கும் பூக்களினோடு…
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு…
வானம் பொழியும் மழையின் ஷவரில்…
நாளும் நீராடு…

—BGM—

ஆண் : உன்னை கடந்து போகிற போது…
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு…
பூவை உடைக்கும் காற்றை போல…
புகுந்து விளையாடு…

ஆண் : இந்த ஜீவிதம் ஆனந்தம்…
கவலைகள் என்று ஒன்று கிடையாது…
வெண்ணிலா தேயலாம்…
வெளிச்சத்தை வெட்டி கொல்ல முடியாது

ஆண் : மனித ராசி ஒன்றுதான்…
சிரிக்க தெரிந்தது…

—BGM—

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

—BGM—


Notes : Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading