இரவு பகலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Iravu Pagalai Theda Song Lyrics in Tamil


—BGM—

{ ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட… } * (2)

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

—BGM—

ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே…
தூரம் தூரம்…
எங்கே மாறும் எங்கே சேரும்…
சொல்லும் காலம்…

ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்…
அதுவொரு காலம்…
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்…
இலையுதிர் காலம்…

ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்…
தனியாக அழகில்லையே…
கடலைச் சேரா நதியைக் கண்டால்…
தரையில் ஆடும் மீனைக் கண்டால்…
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

—BGM—

ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி…
எங்கே போகும்…
பூக்கள் பேச வாயிருந்தால்…
என்ன பேசும்…

ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்…
கூட்டைத் தேடும்…
பறவை போனால் பறவைக் கூடு…
யாரைத் தேடும்…

ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே…
யரோடு உறவாடுமோ…
அன்னையில்லா பிள்ளை கண்டால்…
பிள்ளையில்லா அன்னை கண்டால்…
அன்பேயில்லா உலகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

—BGM—


Notes : Iravu Pagalai Theda Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. இரவு பகலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading