ஜூலை பதினாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

July Pathinaaru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…
கன்னம் என் கன்னம் கண்டால்…
வயது பதினாலுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ… ஓஓஓஓஹ்…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ… ஓஓஓஓஹ்…

—BGM—

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்…
காதல்தான் என்னை காணவில்லை…
காதல்தான் தேர்வில்லாத பள்ளி…
கல்லாமல் நானும் போவதில்லை…

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே…
என் கண்கள் பூத்தாடுதே…
அந்த பொன் நாளும் கை கூடவே…
என் மார்பு கூத்தாடுதே…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ…

—BGM—

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்…
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்…
பொய் காதல் தன்னை மட்டும் காணும்…
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்…

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே…
என் காதல் நான் தேடுவேன்…
அது நிறைவேறும் திருநாளிலே…
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன்… ஏஹ் ஏஹ்…

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ…

—BGM—


Notes : July Pathinaaru Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. ஜூலை பதினாறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading