என் விழியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅன்னா கத்ரீனா, வளையில் சண்டி & கோபி சுந்தர்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…

பெண் : என்னுள் நானாய் பாடும் பாடல்…
ஒட்டுக் கேட்பதேன்…
நெஞ்சுள் முணுமுணுப்பதேன்…
என் வாழ்வை வாழ்வதேன்…

பெண் : எந்தன் பசி எந்தன் தாகம் கூட…
உனைக் கேட்டு வரவேண்டுமா…
நீ எந்தன் சுவாசமா…

பெண் : மீண்டும் மீண்டும் என் மேல்…
பூ வீசிப் போகிறாய்…
ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ…

—BGM—

பெண் : எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீா்…
நான் ஏந்த முயல்கின்றேன்…
உன் சோகம் என் நெஞ்சில்…
ஏந்திப் போகிறேன் அது ஏனடா…

பெண் : நான் ஏன் நீயாகிறேன்…
ஆயினும் நான் நானே…
என்னில் உனைக் காணத்தானே…
நீயானேனே நானே…

—BGM—

ஆண் : அருகே நீ தூரமாய்…
தினமும் கொன்றாயடி…
யாா் யாரோ நாம் என்றாயடி…

—BGM—

ஆண் : நெஞ்சைக் கொட்டி நான் தீா்த்தேன்…
கேளாமல் நீ சென்றாய்…
என் மேல் காதல் தோன்றாதா…
பேசாமல் நீ வதைக்கிறாய்…

ஆண் : என் காதல் நீ காண மாட்டாயா…
மாட்டாயா…

—BGM—


Notes : En Vizhiyin Kanavu Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Madhan Karky. என் விழியின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading