Category Archives: பொற்காலம்

Oonam Oonam Song Lyrics in Tamil

ஊனம் ஊனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவா & கோவை கமலாதேவாபொற்காலம்

Oonam Oonam Song Lyrics in Tamil


ஆண் : அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது…
கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அதை விட அரிது…

BGM

ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ…

BGM

ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ…
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ…

ஆண் : உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே…
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே…

ஆண் : ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்…
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்…

ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ…
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ…

BGM

ஆண் : கஞ்ச பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம்…
அத கண்டிருக்கேன் நானும்…
நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ… ஓ…

ஆண் : கடன் கொடுத்தவன் எதுர வந்தா…
கடன் பட்டவன் ஊமை…
இத கண்டிருக்கோம் நாம…
ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ…

ஆண் : காட்சி இங்க நல்லாலே…
கண்ணு கூட வேணாங்கோ…
வாய்மை நெஞ்சில் இருக்கையிலே…
வாயும் கூட வேணாங்கோ…

ஆண் : ஊனம் என்னடா ஊனம்…
அட ஞானம்தானே வேணும்…
அந்த ஞானம் வர வேணுமுன்னா…
மனசு மாற வேணும்…

ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ…
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ…

BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல வளர்ந்திருக்குது தென்னை…
அது வளைஞ்சிருக்குது என்ன…
அதில் தேங்காய வெறுத்தவங்க யாருங்கோ… ஓ…

ஆண் : மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணு…
அதில் மொட்ட கோபுரம் ஒன்னு…
அதில் மீனாட்சி குடியிருக்கா பாருங்கோ…

ஆண் : கண்ணதாசன் சொன்னாங்கோ…
வைரமுத்து சொன்னாங்கோ…
ஊனம் என்பது மனசுதான்னு…
உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ…

ஆண் : ஊனம் என்னடா ஊனம்…
அட ஞானம்தானே வேணும்…
அந்த ஞானம் வர வேணுமுன்னா…
மனசு மாற வேணும்…

ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ…
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ…

ஆண் : உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே…
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே…

ஆண் : ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்…
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்…

ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ…
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ…

ஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ…
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ…

BGM


Notes : Oonam Oonam Song Lyrics in Tamil. This Song from Porkaalam (1997). Song Lyrics penned by Vairamuthu. ஊனம் ஊனம் பாடல் வரிகள்.


சிங்குச்சா சிங்குச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராதேவாபொற்காலம்

Chingucha Chingucha Song Lyrics in Tamil


குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்
ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்…

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்…

பெண் : சிங்குச்சா சிங்குச்சா…
செகப்பு கலரு சிங்குச்சா…
பச்சை கலரு சிங்குச்சா…
மஞ்சள் கலரு சிங்குச்சா…

பெண் : வண்ண வண்ண சேலைக…
வசதியான சேலைக…
வானவில்ல புழிஞ்சு வந்து…
சாயம் போட்ட சேலைக…

பெண் : கூடு தாவி ஓடும் எங்க…
உள்ளம் ஓடும் சேலைக…
உறுதியான சேலைக…
உடுத்துவாங்க ஏழைங்க…

பெண் : சிங்குச்சா சிங்குச்சா…
செகப்பு கலரு சிங்குச்சா…
பச்சை கலரு சிங்குச்சா…
மஞ்சள் கலரு சிங்குச்சா…

BGM

பெண் : புள்ள பொறந்தா…
அ… கண்ண தொறந்தா…
தொட்டில் கட்ட முன்னால் வரும் சேலை…

பெண் : பொண்ணு ஒருத்தி…
அட பூவா சமைஞ்சா…
சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேலை…

பெண் : சிங் சா சிங்குச்சா…
சேலை சத்தம் சிங்குச்சா…
சேலை பாட்டு சிங்குச்சா…

பெண் : பெண் பார்க்க போகையிலும்…
சேலைதான் சேலைதான்…
கல்யாணம் நிச்சயமா…
சேலைதான் சேலைதான்…

பெண் : சீர் வரிசை என்றதுமே…
சேலைதான் சேலைதான்…
சீதனத்தில் முதல் வரிசை…
சேலைதான் சேலைதான்…

பெண் : கல்யாண மேடையில…
கட்டுவதும் சேலைதான்…
கட்டிலுக்கு வேற தினுசு…
கொட்டுவதும் சேலைதான்…

பெண் : சிங்குச்சா சிங்குச்சா…
செகப்பு கலரு சிங்குச்சா…
பச்சை கலரு சிங்குச்சா…
மஞ்சள் கலரு சிங்குச்சா…

BGM

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்…

பெண் : எங்கே போனாலும்…
யார் என்ன சொன்னாலும்…
நம் பண்பாட்டுக்கு பேரு சொல்லும் சேலை…

பெண் : சல்வார் கம்மீசு…
அது எல்லாம் தமாசு…
அட சந்தோஷத்த அள்ளி தரும் சேலை…

பெண் : சிங் சா சிங்குச்சா…
கொமரிக்கும்தான் சிங்குச்சா…
கெழவிக்கும்தான் சிங்குச்சா…

பெண் : இந்திரா காந்தி கட்டியதும்…
சேலைதான் சேலைதான்…
அம்மனுக்கு சாத்துரதும்…
சேலைதான் சேலைதான்…

பெண் : வெள்ளைக்காரி இங்க வந்தா…
சேலைதான் சேலைதான்…
வெளிநாட்டிலும் நம்ம பொண்ணுங்க…
சேலைதான் சேலைதான்…

பெண் : நாகரிகம் மாறும் போதும்…
மாறிடாத சேலைதான்…
வாழ்க்கையோட கடைசி வரைக்கும்…
வருவது இந்த சேலைதான்…

பெண் : சிங்குச்சா சிங்குச்சா…
செகப்பு கலரு சிங்குச்சா…
பச்சை கலரு சிங்குச்சா…
மஞ்சள் கலரு சிங்குச்சா…

பெண் : வண்ண வண்ண சேலைக…
வசதியான சேலைக…
வானவில்ல புழிஞ்சு வந்து…
சாயம் போட்ட சேலைக…

பெண் : கூடு தாவி ஓடும் எங்க…
உள்ளம் ஓடும் சேலைக…
உறுதியான சேலைக…
உடுத்துவாங்க ஏழைங்க…

பெண் : சிங்குச்சா சிங்குச்சா…
செகப்பு கலரு சிங்குச்சா…
பச்சை கலரு சிங்குச்சா…
மஞ்சள் கலரு சிங்குச்சா…
ஹ சிங்குச்சா… ஹ சிங்குச்சா…


Notes : Chingucha Chingucha Song Lyrics in Tamil. This Song from Porkaalam (1997). Song Lyrics penned by Vairamuthu. சிங்குச்சா சிங்குச்சா பாடல் வரிகள்.


கருவேலங் காட்டுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம் & அருண்மொழிதேவாபொற்காலம்

Karuvella Kaatukkulle Song Lyrics in Tamil


பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

BGM

பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

BGM

பெண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்…
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…

BGM

பெண் : பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது…
சும்மா பொரனி பேசுது…

ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

ஆண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்…
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…
பொரசல் என்ன பொரசலின்னு பொரனி பேசுது…
சும்மா பொரனி பேசுது…

BGM

பெண் : ஈசானி மூலையில…
ஊசி மழை பெய்யயில…
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே… ஏஏய்…

பெண் : ஈசானி மூலையில…
ஊசி மழை பெய்யயில…
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே…

பெண் : நாம கூது காய்ஞ்சதுண்டா என்று குத்தி பேசுது…
குருவி குத்தி பேசுது…

ஆண் : கோடை மழை புடிச்சாலும்…
அட கூத காத்து அடிச்சாலும்…
புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா…

ஆண் : இது பொம்பளைக்கு புரியலைன்னு பொரனி பேசுது…
குருவி பொரனி பேசுது…

பெண் : ஆ… சோடியோடு பாடி ஆட…
ஓடி ஓடி வந்த போது…
சண்ட போட்ட குருவியின்னு சாடை பேசுது…

பெண் : கூடு யாரு கூடு என்றும்…
சோடி எங்கு கூடுமென்றும்…
கொஞ்ச நாளில் தெரியுமென்று குருவி பேசுது…

பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

BGM

பெண் : சோலையன் காட்டுக்குள்ள…
சோளம் கொத்தி திங்கையில…
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே… ஏஏய்…

பெண் : சோலையன் காட்டுக்குள்ள…
சோளம் கொத்தி திங்கையில…
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே…

பெண் : நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகி பேசுது…
குருவி மொனகி பேசுது…

ஆண் : முத்து சோளம் திங்கையிலே…
அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா…
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே… ஹ…

ஆண் : இதை பொட்டச்சிக்கு சொல்ல சொல்லி குத்தி பேசுது…
குருவி குத்தி பேசுது…

பெண் : அஹா… அத்து வன காட்டுக்குள்ள…
ஒத்த வாயி தண்ணி கேட்டா…
முள்ளு காட்டு குருவியின்னு லொள்ளு பேசுது…

பெண் : காடு வெட்டும் சாக்க வச்சு…
கூடு வெட்ட கூடாதுன்னு…
பாடுபட்ட குருவி ஒன்னு பதறி பேசுது…

ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

பெண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்…
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது…
சும்மா பொரனி பேசுது…

பெண் : கருவேலங் காட்டுக்குள்ள… ஏஏ… ஏய்… ஏய்…

BGM


Notes : Karuvella Kaatukkulle Song Lyrics in Tamil. This Song from Porkaalam (1997). Song Lyrics penned by Vairamuthu. கருவேலங் காட்டுக்குள்ள பாடல் வரிகள்.


தஞ்சாவூரு மண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிருஷ்ணராஜ்தேவாபொற்காலம்

Thanjavooru Mannu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

ஆண் : எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா… ஆஆ…
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா…
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா…
பதில் சொல்லம்மா…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

BGM

ஆண் : மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு…
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு…
காது செஞ்ச மண்ணு அது மேலூரு…
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு…

ஆண் : கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க…
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க…
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க…
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க…

ஆண் : நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

BGM

ஆண் : தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு…
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு…
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு…
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு…

ஆண் : காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு…
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு…
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு…
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு…

ஆண் : ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு…
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

ஆண் : போடு… தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

ஆண் : எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா… ஆஆ…
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா…
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா…
பதில் சொல்லம்மா…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…
போடு…

BGM


Notes : Thanjavooru Mannu Song Lyrics in Tamil. This Song from Porkaalam (1997). Song Lyrics penned by Vairamuthu. தஞ்சாவூரு மண்ணு பாடல் வரிகள்.