கருவேலங் காட்டுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம் & அருண்மொழிதேவாபொற்காலம்

Karuvella Kaatukkulle Song Lyrics in Tamil


பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

BGM

பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்…
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…

BGM

பெண் : பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது…
சும்மா பொரனி பேசுது…

ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

ஆண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்…
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…
பொரசல் என்ன பொரசலின்னு பொரனி பேசுது…
சும்மா பொரனி பேசுது…

BGM

பெண் : ஈசானி மூலையில…
ஊசி மழை பெய்யயில…
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே… ஏஏய்…

பெண் : ஈசானி மூலையில…
ஊசி மழை பெய்யயில…
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே…

பெண் : நாம கூது காய்ஞ்சதுண்டா என்று குத்தி பேசுது…
குருவி குத்தி பேசுது…

ஆண் : கோடை மழை புடிச்சாலும்…
அட கூத காத்து அடிச்சாலும்…
புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா…

ஆண் : இது பொம்பளைக்கு புரியலைன்னு பொரனி பேசுது…
குருவி பொரனி பேசுது…

பெண் : ஆ… சோடியோடு பாடி ஆட…
ஓடி ஓடி வந்த போது…
சண்ட போட்ட குருவியின்னு சாடை பேசுது…

பெண் : கூடு யாரு கூடு என்றும்…
சோடி எங்கு கூடுமென்றும்…
கொஞ்ச நாளில் தெரியுமென்று குருவி பேசுது…

பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

BGM

பெண் : சோலையன் காட்டுக்குள்ள…
சோளம் கொத்தி திங்கையில…
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே… ஏஏய்…

பெண் : சோலையன் காட்டுக்குள்ள…
சோளம் கொத்தி திங்கையில…
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே…

பெண் : நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகி பேசுது…
குருவி மொனகி பேசுது…

ஆண் : முத்து சோளம் திங்கையிலே…
அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா…
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே… ஹ…

ஆண் : இதை பொட்டச்சிக்கு சொல்ல சொல்லி குத்தி பேசுது…
குருவி குத்தி பேசுது…

பெண் : அஹா… அத்து வன காட்டுக்குள்ள…
ஒத்த வாயி தண்ணி கேட்டா…
முள்ளு காட்டு குருவியின்னு லொள்ளு பேசுது…

பெண் : காடு வெட்டும் சாக்க வச்சு…
கூடு வெட்ட கூடாதுன்னு…
பாடுபட்ட குருவி ஒன்னு பதறி பேசுது…

ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…

பெண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்…
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது…
சும்மா பொரனி பேசுது…

பெண் : கருவேலங் காட்டுக்குள்ள… ஏஏ… ஏய்… ஏய்…

BGM


Notes : Karuvella Kaatukkulle Song Lyrics in Tamil. This Song from Porkaalam (1997). Song Lyrics penned by Vairamuthu. கருவேலங் காட்டுக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading