காடு மலை கடந்து வந்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கே. சோமுகே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Kaadu Malai Kadanthu Vanthom Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஐயப்பா சாமி ஐயப்பா…
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா…

ஆண் : காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா…
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா…
மாய‌ வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா…
சபரி வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா…

ஆண் : நெய்யபிஷேகம் பாலபிஷேகம்…
தேனபிஷேகம் சாமிக்கே…
சந்தனம் பன்னீர் அபிஷேகம்…
எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே…

ஆண் : காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா…
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா…

—BGM—

ஆண் : ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா…
எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா…
ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா…
எங்கள் பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா…

ஆண் : நாங்கள் பேட்டைத் துள்ளி ஆடும் போது ஐயப்பா…

—BGM—

ஆண் : பேட்டைத் துள்ளி ஆடும் போது ஐயப்பா…
நீ ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா…

ஆண் : காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா…
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா…

—BGM—

ஆண் : நீலவிழி கண்ணனுக்கும்…
நீரணிந்த‌ ஈசனுக்கும்…
பாலகனாய் அவதரித்த‌ ஐயப்பா…

ஆண் : நீலவிழி கண்ணனுக்கும்…
நீரணிந்த‌ ஈசனுக்கும்…
பாலகனாய் அவதரித்த‌ ஐயப்பா…

ஆண் : வேலவனின் அருமைத் தம்பி…
காலமெல்லாம் உனை வேண்டி…
நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா…

ஆண் : காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா…
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா…

—BGM—

ஆண் : மணிகண்டா உன் கருணை அமுதமப்பா…
உன் புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா…
மணிகண்டா உன் கருணை அமுதமப்பா…
உன் புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா…

ஆண் : மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா…
அப்பா மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா…
சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா…

ஆண் : நெய்யபிஷேகம் பாலபிஷேகம்…
தேனபிஷேகம் சாமிக்கே…
சந்தனம் பன்னீர் அபிஷேகம்…
எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே…

ஆண் : காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா…
உனை காண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா…

ஆண் : ஐயப்பா சரணம் ஐயப்பா…
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா…
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா…
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா…


Notes : Kaadu Malai Kadanthu Vanthom Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. காடு மலை கடந்து வந்தோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading