| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | எஸ். ஜானகி | பால பாரதி | தலைவாசல் |
Athi Kaalai Kaatre Nillu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அதிகாலை காற்றே நில்லு…
இதமான பாடல் சொல்லு…
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே…
இது ஒரு புது சுகமே…
பெண் : அதிகாலை காற்றே நில்லு…
இதமான பாடல் சொல்லு…
—BGM—
பெண் : இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது…
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது…
பெண் : ஓ… காலை மேகம் சோலை ஆகும்…
வானம் எங்கள் சாலை ஆகும்…
தாமரை கொடை விரிக்கும்…
—BGM—
பெண் : அதிகாலை காற்றே நில்லு…
இதமான பாடல் சொல்லு…
—BGM—
பெண் : மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது…
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது…
பெண் : ஓ… வானவில்லின் வண்ணம் யாவும்…
பாதம் வந்தே கோலம் போடும்…
காவியம் தலை வணங்கும்…
—BGM—
பெண் : அதிகாலை காற்றே நில்லு…
இதமான பாடல் சொல்லு…
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே…
இது ஒரு புது சுகமே…
Notes : Athi Kaalai Kaatre Nillu Song Lyrics in Tamil. This Song from Thalai Vaasal (1992). Song Lyrics penned by Vairamuthu. அதிகாலை காற்றே பாடல் வரிகள்.
