தஞ்சாவூரு மண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிருஷ்ணராஜ்தேவாபொற்காலம்

Thanjavooru Mannu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

ஆண் : எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா… ஆஆ…
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா…
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா…
பதில் சொல்லம்மா…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

—BGM—

ஆண் : மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு…
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு…
காது செஞ்ச மண்ணு அது மேலூரு…
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு…

ஆண் : கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க…
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க…
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க…
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க…

ஆண் : நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

—BGM—

ஆண் : தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு…
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு…
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு…
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு…

ஆண் : காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு…
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு…
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு…
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு…

ஆண் : ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு…
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…

ஆண் : போடு… தஞ்சாவூரு மண்ணு எடுத்து…
தாமிரபரணித் தண்ணிய விட்டு…
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை…
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…

ஆண் : எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா… ஆஆ…
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா…
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா…
பதில் சொல்லம்மா…

ஆண் : தந்தானே தந்தானே தந்தானக் குயிலே…
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…
போடு…

—BGM—


Notes : Thanjavooru Mannu Song Lyrics in Tamil. This Song from Porkaalam (1997). Song Lyrics penned by Vairamuthu. தஞ்சாவூரு மண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading