Category Archives: அம்மன் கோவில் வாசலிலே

அம்மன் கோவில் வாசலிலே – Amman Kovil Vasalile (1996)

வந்தாள் புகுந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & சுவர்ணலதாசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil


BGM

குழு : வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…

BGM

குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்…
பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்…
பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே…
அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே…

குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும்…
உன்னால் வந்ததம்மா…
நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்…
தேவ மங்கையோ ஜீவ கங்கையோ…

குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

BGM

குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே…
வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே…
தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே…
தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே…

குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும்…
வந்தாள் பொன்மகளே…
இவள் இங்கே வந்து காலை வைத்ததும்…
இல்லம் வாழுமே இன்பம் சூழுமே…

குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…


Notes : Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. வந்தாள் புகுந்த பாடல் வரிகள்.


பொன்னூஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

பெண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

ஆண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

ஆண் : அழகான தேகம் முழுதாக பார்க்க…
தடை போடும் தங்க நிலா…

பெண் : மணமாலை சூடும் மறுநாளில் இங்கு…
கடை போடும் மங்கை நிலா…

ஆண் : செந்தேனும் பாலும்… ம்ம்ம்…
பெண் : செவ்வாயில் ஊறும்… ம்ம்ம்…
ஆண் : ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம்…
பெண் : ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

பெண் : பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன…
புரியாத பிள்ளை நிலா…

ஆண் : இரவான பின்பு எனை தேடி மெல்ல…
வரவேண்டும் வெள்ளை நிலா…

பெண் : சிங்கார லீலை…
ஆண் : கொண்டாடும் வேளை…
பெண் : நீதானே எந்தன் இடை சூடும் சேலை…
ஆண் : ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

BGM


Notes : Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. பொன்னூஞ்சல் பாடல் வரிகள்.


வயசு பொண்ணுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Vayasu Ponnuthan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓய் மாமோய்…

BGM

பெண் : வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்…
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது…
மாமா சின்ன மாமா…

பெண் : குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்…
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது…
மாமா சின்ன மாமா…

பெண் : உனக்காகத்தான் சமைஞ்சி நின்னேனே…
சரி ஜோடியா அமைஞ்சி நின்னேனே…

பெண் : அடடா… வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்…
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது…
மாமா சின்ன மாமா…

BGM

பெண் : காளை மாடு மொறைக்குமா…
கறவை மாட்டையும் வெறுக்குமா…
மாமனுக்கு வெவரமா விளக்கி சொல்லணுமா…

BGM

பெண் : ஆ… கொண்டை சேவல் வெறைக்குமா…
கோழி வந்ததும் வெரட்டுமா…
மூக்கு வச்சி உரசுனா மறுப்பு சொல்லிடுமா…

பெண் : அட ராப்போது ஆனா இந்த பூ வாடுது…
இந்த மகராசன் பேர சொல்லி போராடுது…
இதை ஏய்யா நீ பாக்கல அது என்னான்னு கேக்கல…

பெண் : வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்…
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது…
மாமா சின்ன மாமா…

பெண் : குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்…
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது…
மாமா சின்ன மாமா…

BGM

பெண் : ஹேய்… பாக்குறப்போ அசத்துற…
பருவ நெஞ்சையும் உசுப்புற…
ஆக மொத்தம் படுத்துற…
ஆட்டி வைக்கிறியே மாமா…

பெண் : எரிச்சல கெளப்புற…
எதுக்கு என்ன புழியுற…
வேணுமுன்னு விரும்பினா விலகி நிக்குறியே…

பெண் : என்ன மார் மேல வாங்கி மெல்ல தாலாட்டணும்…
ரெண்டு தோள் மேல தாங்கி அள்ளி சீராட்டணும்…
ஒரு மாமாங்கம் ஆனாலும் மாமா நான் விடமாட்டேன்…

பெண் : வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்…
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது…
மாமா சின்ன மாமா…

பெண் : குருவி குஞ்சிதான் இந்த கத்திரி பிஞ்சுதான்…
உன்ன நெருங்கி நிக்குது நெனைச்சி சொக்குது…
மாமா சின்ன மாமா…

பெண் : உனக்காகத்தான் சமைஞ்சி நின்னேனே…
சரி ஜோடியா அமைஞ்சி நின்னேனே…

பெண் : அடடா… வயசு பொண்ணுதான் மஞ்ச வாழைக்கன்னுதான்…
உன்ன ஒரச எண்ணுது சரசம் பண்ணுது…
மாமா சின்ன மாமா…

BGM


Notes : Vayasu Ponnuthan Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. வயசு பொண்ணுதான் பாடல் வரிகள்.


Amman Kovil Vaasalile Song Lyrics in Tamil

அம்மன் கோயில் வாசலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Amman Kovil Vaasalile Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…

பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு…
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு…

ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு…
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு…

பெண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…

ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…

BGM

ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்…
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்…
குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்…

பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா…
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்…
குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்…

ஆண் : அடி மேக்கால ஓடும்…
அந்த வாய்க்கால கேளு…

பெண் : தென்னந்தோப்போரம் பாடும்…
சின்ன மைனாவ கேளு…

ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு…
இதுதான்டி தங்கமணி…

பெண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏ…
பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏ…

BGM

பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம்…
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்…
குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும்…

ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்…
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்…
குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்…

பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து…
பசு நெய்த்தான் ஊத்து…

ஆண் : அடி யம்மாடி ராக்கு…
புது பொங்கலத்தான் ஆக்கு…

பெண் : அவ தாய்ப்போல காப்பாளே…
புகழ் சேரும் பொருள் சேரும்…
புது வாழ்வு கை வரும்…

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…

பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு…
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு…

ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு…
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு…


Notes : Amman Kovil Vaasalile Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் வாசலிலே பாடல் வரிகள்.