பொன்னூஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

பெண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

ஆண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

—BGM—

ஆண் : அழகான தேகம் முழுதாக பார்க்க…
தடை போடும் தங்க நிலா…

பெண் : மணமாலை சூடும் மறுநாளில் இங்கு…
கடை போடும் மங்கை நிலா…

ஆண் : செந்தேனும் பாலும்… ம்ம்ம்…
பெண் : செவ்வாயில் ஊறும்… ம்ம்ம்…
ஆண் : ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம்…
பெண் : ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

—BGM—

பெண் : பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன…
புரியாத பிள்ளை நிலா…

ஆண் : இரவான பின்பு எனை தேடி மெல்ல…
வரவேண்டும் வெள்ளை நிலா…

பெண் : சிங்கார லீலை…
ஆண் : கொண்டாடும் வேளை…
பெண் : நீதானே எந்தன் இடை சூடும் சேலை…
ஆண் : ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

—BGM—


Notes : Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. பொன்னூஞ்சல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading