அம்மன் கோயில் வாசலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Amman Kovil Vaasalile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…

பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு…
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு…

ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு…
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு…

பெண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…

ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…

—BGM—

ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்…
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்…
குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்…

பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா…
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்…
குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்…

ஆண் : அடி மேக்கால ஓடும்…
அந்த வாய்க்கால கேளு…

பெண் : தென்னந்தோப்போரம் பாடும்…
சின்ன மைனாவ கேளு…

ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு…
இதுதான்டி தங்கமணி…

பெண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏ…
பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏ…

—BGM—

பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம்…
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்…
குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும்…

ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்…
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்…
குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்…

பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து…
பசு நெய்த்தான் ஊத்து…

ஆண் : அடி யம்மாடி ராக்கு…
புது பொங்கலத்தான் ஆக்கு…

பெண் : அவ தாய்ப்போல காப்பாளே…
புகழ் சேரும் பொருள் சேரும்…
புது வாழ்வு கை வரும்…

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே… ஏ…
குழு : வாசலிலே… ஏஏஏ…
ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே… ஏ…
குழு : பூங்குயிலே… ஏஏஏ…

பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு…
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு…

ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு…
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு…


Notes : Amman Kovil Vaasalile Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் வாசலிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading