ஜீவன் என்பது உள்ளவரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தவசீலன்கே. வீரமணிசோமு & கஜாஐயப்பன் பாடல்கள்

Jeevan Enpathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…

—BGM—

ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…
ஹரிகரன் புகழை பாடும் வரை…
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…
ஹரிகரன் புகழை பாடும் வரை…
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…

ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…

—BGM—

ஆண் : கார்த்திகை தோறும் மாலை அணிந்து…
நாற்பது நாளும் நோன்பும் இருந்து…
நாவில் ஐயன் நாமம் பொழிந்து…
நடந்தே சென்று கோவிலடைந்து…

ஆண் : இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்…
கோடி மணி தந்தான் என்னிடத்தில்…
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்…
கோடி மணி தந்தான் என்னிடத்தில்…

ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…

—BGM—

ஆண் : நெய் விள‌க்காலே அலங்காரம்…
கண்டேன் நெஞ்சில் மறையும் அகங்காரம்…
நெய் விள‌க்காலே அலங்காரம்…
கண்டேன் நெஞ்சில் மறையும் அகங்காரம்…

ஆண் : சரணம் என்னும் ஓம்காரம்…
சரணம் என்னும் ஓம்காரம்…
சர்வமும் அதிலே ரீங்காரம்…

ஆண் : ஆசையில் மோதும் அலையாவும்…
ஜோதியைக் கண்டால் தெளிவாகும்…
மகர‌ ஜோதியைக் கண்டால் தெளிவாகும்…

ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…

—BGM—

ஆண் : பம்பைக் கரையில் அவதரித்தான்…
பந்தள‌ நாட்டில் பணி முடித்தான்…
பம்பைக் கரையில் அவதரித்தான்…
பந்தள‌ நாட்டில் பணி முடித்தான்…

ஆண் : மகிஷியை வென்றே வாழ்வளித்தான்…
மழலை வடிவில் அருள் கொடுத்தான்…
அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்…
அகிலம் வாழவும் துணை இருப்பான்…
இந்த‌ அகிலமும் வாழவும் துணை இருப்பான்…

ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…
ஹரிகரன் புகழை பாடும் வரை…
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…

ஆண் : ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…
என் நெஞ்சம் வண‌ங்கும் சபரிமலை…


Notes : Jeevan Enpathu Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Thavaseelan. ஜீவன் என்பது உள்ளவரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading