Category Archives: குரு சிஷ்யன்

குரு சிஷ்யன் – Guru Sishyan (1988)

Kandu Pudichen Song Lyrics in Tamil

கண்டுபுடிச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகுரு சிஷ்யன்

Kandu Pudichen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோய்… கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

ஆண் : சிஷ்யா சிஷ்யா…
இது சரியா சரியா…
மானே தேனே மயிலே குயிலே என்று…
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

BGM

ஆண் : மாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா…
வம்பு தும்பு ஏதாச்சும் பண்ணாளா…

ஆண் : உள்ளாற ஏதேதோ ஞாபகம்…
உன் பாட்ட நெஞ்சோடு பாடுற…
தினக்கிட்ட தினக்கிட்ட தின தின…

ஆண் : என்னான்னு ஏதுன்னு கேட்டதும்…
சொல்லாம கொள்ளாம ஓடுற…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : எத்தனைப் பேர் பார்த்திருக்கேன்…
எங்கிட்ட நீ மறைக்காதே…
சோத்துல முழுப் பூசணிக்காய்…
மறையுமுன்னு நினைக்காதே…

ஆண் : காதில் பூவ சுத்திப்பாக்க…
நீதான் நினைச்சா நடக்காதே…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

ஆண் : சிஷ்யா சிஷ்யா…
இது சரியா சரியா…
மானே தேனே மயிலே குயிலே என்று…
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று…
தர தனத தா…

BGM

ஆண் : தினக்கு தின…
காதல் கலையில் நான்தான் உன் முன்னோடி…
குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி…

ஆண் : கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ…
அண்ணாச்சி என் வாா்த்த ஏத்துக்கோ…
திங்கு தங்கு திதங்க்கு…
திங்கு தங்கு திதங்க்கு…

ஆண் : பொண்டாட்டி ஆகாத காதலி…
தாயாக ஆகாம பாத்துக்கோ…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : ஆத்திரத்தில் துடிக்காதே…
அவசரமா புடிக்காதே…
தூண்டியிலே மீனாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே…

ஆண் : திட்டம் போட்டு வட்டம் போடு…
குருவின் பெயர கெடுக்காதே…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

ஆண் : சிஷ்யா சிஷ்யா…
இது சரியா சரியா…
மானே தேனே மயிலே குயிலே என்று…
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்… ஹோய்…


Notes : Kandu Pudichen Song Lyrics in Tamil. This Song from Guru Sishyan (1988). Song Lyrics penned by Vaali. கண்டுபுடிச்சேன் பாடல் வரிகள்.


ஜிங்கிடி ஜிங்கிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாகுரு சிஷ்யன்

Jingidi Jingidi Unakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு…
இங்க என்னடி உன் மனக்கணக்கு…
சொல்லடி சொல்லடி எனக்கு…
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு…

ஆண் : சந்தேகம் வரலாமா…
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா…
சந்தேகம் வரலாமா…
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா…

ஆண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு…
இங்க என்னடி உன் மனக்கணக்கு…
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு…

BGM

பெண் : அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்…
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது…
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி…
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது…

பெண் : அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்…
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது…
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி…
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது…

ஆண் : ஏ… கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்…
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி…
சிந்தாதடி இங்கு சில்லறைய…
என் சிந்தாமணி அது செல்லாதடி…

பெண் : ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு…
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே…
ஆண் : அதைச் சொல்லாத செல்லக் கிளியே…

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு…
அட என்ன இங்கு உந்தன் கணக்கு…
சொல்லிடு சொல்லிடு எனக்கு…
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு…

பெண் : என் வீர மகராஜா…
அடடடடா ஊரச் சுத்தலாமா…
என் வீர மகராஜா…
அடடடடா ஊரச் சுத்தலாமா…

BGM

ஆண் : துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்…
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே…
வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து…
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே… ஹோ…

ஆண் : துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்…
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே…
வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து…
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே…

பெண் : ஊர்க்காவலா நான் உன் காதலி…
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்…
காதல் கிளி எந்தன் காவல் உந்தன்…
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று…

ஆண் : பாமாவுக்கு நான் கண்ணனடி…
நல்ல மாமி வீட்டு மகராஜனடி…
என்னை தீண்டாத செல்லக் கிளியே…

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு…
அட என்ன இங்கு உந்தன் கணக்கு…

ஆண் : அட சொல்லடி சொல்லடி எனக்கு…
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு…

பெண் : என் வீர மகராஜா…
அடடடடா ஊரைச் சுத்தலாமா…

ஆண் : சந்தேகம் வரலாமா…
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா…

பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு…
அட என்ன இங்கு உந்தன் கணக்கு…

ஆண் : அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு…


Notes : Jingidi Jingidi Unakku Song Lyrics in Tamil. This Song from Guru Sishyan (1988). Song Lyrics penned by Ilaiyaraaja. ஜிங்கிடி ஜிங்கிடி பாடல் வரிகள்.


வா வா வஞ்சி இளம் மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாகுரு சிஷ்யன்

Vaa Vaa Vanji Ila Maane Song Lyrics in Tamil


ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…

BGM

ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…

பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…

BGM

ஆண் : ஈரெட்டு வயதில் ஈர தாமரை…
வாய் விட்டு சிரிக்காதா…

பெண் : வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்…
தேன் சொட்டு தெரிக்காதா…

ஆண் : தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு…
தாகத்தை தணித்திட வா…

பெண் : ஆனாலும் நீ காட்டும் வேகம்…
ஆத்தாடி ஆகாதம்மா…

ஆண் : பொன்வண்டு கூத்தாடும்போது…
பூச்செண்டு நோகதம்மா…

பெண் : போதும் போதும் போ…

ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…

பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…

BGM

பெண் : நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி…
நூலாட்டம் இளைத்தேனே…

ஆண் : நான் கூட தவித்தேன் வேறு மாதிரி…
பாலாட்டம் கொதித்தேனே…

பெண் : ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்…
ஆளைத்தான் அசத்துவதேன்…

ஆண் : பொன் வண்டு கூத்தாடும் போது…
பூச்செண்டு நோகாதம்மா…

பெண் : கால் மீது கால் போட்டு ஆட…
கல்யாண நாள் இல்லையா…

ஆண் : நேரம் காலம் ஏன்…

பெண் : வந்தாள் வஞ்சி இள மானே…
கொண்டால் உன்னை இங்குதானே…
வாழ்நாளிலே நீங்காமலே…
நீ பாதி நான் பாதியாக…

ஆண் : வா வா வஞ்சி இளம் மானே…
வந்தால் என்னை தருவேனே…

பெண் : வந்தாள் வஞ்சி இளமானே…
கொண்டால் உன்னை இங்குதானே…


Notes : Vaa Vaa Vanji Ila Maane Song Lyrics in Tamil. This Song from Guru Sishyan (1988). Song Lyrics penned by Vaali. வா வா வஞ்சி இளம் மானே பாடல் வரிகள்.