கண்டுபுடிச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகுரு சிஷ்யன்

Kandu Pudichen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹோய்… கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

ஆண் : சிஷ்யா சிஷ்யா…
இது சரியா சரியா…
மானே தேனே மயிலே குயிலே என்று…
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

—BGM—

ஆண் : மாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா…
வம்பு தும்பு ஏதாச்சும் பண்ணாளா…

ஆண் : உள்ளாற ஏதேதோ ஞாபகம்…
உன் பாட்ட நெஞ்சோடு பாடுற…
தினக்கிட்ட தினக்கிட்ட தின தின…

ஆண் : என்னான்னு ஏதுன்னு கேட்டதும்…
சொல்லாம கொள்ளாம ஓடுற…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : எத்தனைப் பேர் பார்த்திருக்கேன்…
எங்கிட்ட நீ மறைக்காதே…
சோத்துல முழுப் பூசணிக்காய்…
மறையுமுன்னு நினைக்காதே…

ஆண் : காதில் பூவ சுத்திப்பாக்க…
நீதான் நினைச்சா நடக்காதே…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

ஆண் : சிஷ்யா சிஷ்யா…
இது சரியா சரியா…
மானே தேனே மயிலே குயிலே என்று…
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று…
தர தனத தா…

—BGM—

ஆண் : தினக்கு தின…
காதல் கலையில் நான்தான் உன் முன்னோடி…
குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி…

ஆண் : கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ…
அண்ணாச்சி என் வாா்த்த ஏத்துக்கோ…
திங்கு தங்கு திதங்க்கு…
திங்கு தங்கு திதங்க்கு…

ஆண் : பொண்டாட்டி ஆகாத காதலி…
தாயாக ஆகாம பாத்துக்கோ…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : ஆத்திரத்தில் துடிக்காதே…
அவசரமா புடிக்காதே…
தூண்டியிலே மீனாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே…

ஆண் : திட்டம் போட்டு வட்டம் போடு…
குருவின் பெயர கெடுக்காதே…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

ஆண் : சிஷ்யா சிஷ்யா…
இது சரியா சரியா…
மானே தேனே மயிலே குயிலே என்று…
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று…

ஆண் : கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்… ஹோய்…


Notes : Kandu Pudichen Song Lyrics in Tamil. This Song from Guru Sishyan (1988). Song Lyrics penned by Vaali. கண்டுபுடிச்சேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading