Category Archives: ஆதி பராசக்தி

ஆதி பராசக்தி – Aathi Parasakthi (1971)

வருகவே வருகவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Varugavae Varugavae Song Lyrics in Tamil


BGM

பெண் : வருகவே வருகவே இறைவா என் தலைவா…
வருகவே வருகவே இறைவா என் தலைவா…
வருகவே வருகவே…

BGM

பெண் : கருணையின் திரு முகம் வருகவே…
காலத்தின் நாயகன் வருகவே…
கருணையின் திரு முகம் வருகவே…
காலத்தின் நாயகன் வருகவே…

பெண் : பெருகிய வலிவோடு வருகவே…
பெருகிய வலிவோடு வருகவே…
பெரும்பொருள் பரம்பொருள் வருகவே…
இறைவா என் தலைவா வருகவே வருகவே…

BGM

பெண் : தான் நினைத்தபடி ஆடும் என்பவரின்…
ஆணவத்து நிலை அருகவே…

BGM

பெண் : வேல் எடுத்த இரு தோள் எடுத்தபடி…
நான் நினைத்த இடம் வருகவே…

BGM

பெண் : காரெடுத்த குழல் மேவு சக்தி தன்னை…
பூ முடிப்பதென்ன வருகவே…

BGM

பெண் : காத்திருக்கும் விழி கோடி கோடி…
அவை பார்த்திருக்க இவள் வருகவே…

பெண் : இறைவா என் தலைவா வருகவே வருகவே…

பெண் : மனிதர் ஆணவம் அழியவே…
நமது நாடகம் முடியவே…
அர்த்த நாரி என இணையவே…
அறிய சக்தியோடு வருகவே…

BGM


Notes : Varugavae Varugavae Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. வருகவே வருகவே பாடல் வரிகள்.


நானாட்சி செய்து வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Naan Atchi Song Lyrics in Tamil


BGM

பெண் : நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…

பெண் : கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…

பெண் : கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…

பெண் : கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…
கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…

BGM

பெண் : ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…

பெண் : நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…

BGM


Notes : Naan Atchi Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. நானாட்சி செய்து வரும் பாடல் வரிகள்.


ஆத்தாடி மாரியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்கே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Aathadi Maari Amma Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவாடை காரி பொன்னழகி உனக்கு…
பொங்கலிட கெடச்சது பாக்கியம் எனக்கு…

ஆண் : மீன்காரன் வீடெங்கும் மீன் வாசம் இருக்கும்…
அடி மீனாட்சி நீ வந்தா நெய் வாசம் அடிக்கும்…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…

BGM

ஆண் : பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே…
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே…
பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே…
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே…

ஆண் : பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே…
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்…
பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே…
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…

BGM

ஆண் : சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி…
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி…
சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி…
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி…

ஆண் : பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா…
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா…
பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா…
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா… ஆ…

BGM


Notes : Aathadi Maari Amma Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. ஆத்தாடி மாரியம்மா பாடல் வரிகள்.


சொல்லடி அபிராமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Solladi Abirami Song Lyrics in Tamil


ஆண் : மணியே மணியின் ஒளியே…
ஒளிரும் அணிபுனைந்த வணியே…
அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே…
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே…
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே…

ஆண் : சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ…
பதில் சொல்லடி அபிராமி…

BGM

ஆண் : நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே…
முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே…

ஆண் : சொல்லடி அபிராமி…

BGM

ஆண் : பல்லுயிரும் படைத்த பரமனுக்கே…
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ…
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே…
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ…

ஆண் : நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ…
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ…
இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ…

ஆண் : சொல்லடி அபிராமி…

BGM

ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ…
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ…
வாராயோ ஒரு பதில் கூறாயோ…
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ…

ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
நடுவில் நின்றாடும் வடிவழகே…
கொடிகள் ஆட முடிகள் ஆட…
புடி பட எழுந்து ஆடும் கலை அழகே…

ஆண் : பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ…
கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட…

ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ…
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ…

BGM

ஆண் : செங்கையில் வண்டுகளின் களின் என்று…
ஜெயம் ஜெயம் என்றாட…
இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு…
தண்டை கலந்தாட…
இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று…
குலைந்து குலைந்தாட…

ஆண் : மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை…
நிலாவும் எழுந்தாட…
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ…
கனிந்து வாராயோ…

BGM

ஆண் : காளி பயங்காரி சூலி மதங்கனி…
கண்களில் தெரிகின்றாள்…
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு…
காட்சியை தருகின்றாள்…

ஆண் : வாடிய மகன் இவன் வாழிய என்று…
ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்…
வானகம் வையகம் எங்கணுமே…
ஒரு வடிவாய் தெரிகின்றாள்…
எழில் வடிவாய் தெரிகின்றாள்…

ஆண் : அன்னை தெரிகின்றாள்…
என் அம்மை தெரிகின்றாள்…
அன்னை தெரிகின்றாள்…
என் அம்மை தெரிகின்றாள்…

ஆண் : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…

BGM


Notes : Solladi Abirami Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. சொல்லடி அபிராமி பாடல் வரிகள்.


ஆயி மகமாயி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Aayi Mahamayi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்…
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையால்…
சமயபுரத்தாலே சாம்பிராணி வாசகியே…
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா…

பெண் : மாயி மகமாயி மணி மந்திர சேகரியே…
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே…
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே…
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே…

BGM

பெண் : சிலம்பு பிறந்ததம்மா சிவலிங்க சாலையிலே…
பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியில்…
உடுக்கை பிறந்ததம்மா உருத்திராட்ச பூமியிலே…
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்…

பெண் : மாயி மகமாயி மணி மந்திர சேகரியே…
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே…

BGM

பெண் : பரிகாசம் செய்தவரை பதை பதைக்க வெட்டிடுவே…
பரிகாரம் கேட்டுவிட்டா பக்கத்துணை நீ இருப்பே…

பெண் : மேல்நாட்டு பிள்ளையிடம் நீ போட்ட முத்திரையை…
நீ பார்த்து ஆத்தி வச்சா நாள் பார்த்து பூஜை செய்வான்…

பெண் : மாயி மகமாயி மணி மந்திர சேகரியே…
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே…

பெண் : குழந்தை வருந்துவது கோவிலுக்கு கேட்கலையோ…
மைந்தன் வருந்துவது மாளிகைக்கு கேட்கலையோ…

பெண் : ஏழை குழந்தையம்மா எடுத்தோர்க்கு பாலனம்மா…
உன் காலில் பணிந்துவிட்டான் தயவுடன் நீ பாருமம்மா…

பெண் : கத்தி போல் வேப்பிலையாம்…
காளியம்மன் மருத்துவமாம்…
ஈட்டி போல் வேப்பிலையாம்…
ஈஸ்வரியின் அருமருந்தாம்…
வேப்பிலையில் உள்ளிருக்கும் விதைத்தனை யார் அறிவார்…

பெண் : ஆயா மனமிறங்கு…
என் ஆத்தா மனம் இறங்கு…
அம்மையே நீ இறங்கு…
என் அன்னையே நீ இறங்கு…


Notes : Aayi Mahamayi Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. ஆயி மகமாயி பாடல் வரிகள்.