ஆத்தாடி மாரியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்கே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Aathadi Maari Amma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவாடை காரி பொன்னழகி உனக்கு…
பொங்கலிட கெடச்சது பாக்கியம் எனக்கு…

ஆண் : மீன்காரன் வீடெங்கும் மீன் வாசம் இருக்கும்…
அடி மீனாட்சி நீ வந்தா நெய் வாசம் அடிக்கும்…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…

—BGM—

ஆண் : பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே…
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே…
பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே…
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே…

ஆண் : பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே…
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்…
பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே…
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…

—BGM—

ஆண் : சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி…
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி…
சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி…
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி…

ஆண் : பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா…
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா…
பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா…
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா…

ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா… ஆ…

—BGM—


Notes : Aathadi Maari Amma Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. ஆத்தாடி மாரியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading