மல்லிகை பூவழகில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசிற்பிஅன்னை வயல்

Malligai Poovazhagil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்…
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே…

பெண் : ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை…
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே…

ஆண் : மல்லிகைப்பூ அழகில்…

—BGM—

ஆண் : தேவி பாதையாவும் திருக்கோயிலாக மாறும்…
பெண் : பார்வை ஏற்றும் தீபம் உந்தன் வார்த்தை வேதமாகும்…

ஆண் : கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்…
பெண் : பெண்ணின் மௌனம் கூசும் அதில் வண்ணம் ஆயிரம்…

ஆண் : கொஞ்சும் மணிச்சந்தம் அது உந்தன் மொழியே…
பெண் : எந்தன் மனசிற்பம் என கொண்டேன் உன்னையே…
ஆண் : தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே…

பெண் : ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை…
உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே…

ஆண் : மல்லிகைப்பூ அழகில்…

—BGM—

ஆண் : உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்…
பெண் : மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாய் வாழும்…

ஆண் : கலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோகப்பூங்கதை…
பெண் : ஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை…

ஆண் : சொந்தம் இது சொர்கம் என வந்தது அருகே…
பெண் : சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே…
ஆண் : நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே…

பெண் : ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை…
உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே…

ஆண் : மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்…
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே…

பெண் : ஆசை மணி ஓசையிலே…


Notes : Malligai Poovazhagil Song Lyrics in Tamil. This Song from Annai Vayal (1992). Song Lyrics penned by Pazhani Bharathi. மல்லிகை பூவழகில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading