நானாட்சி செய்து வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்ஆதி பராசக்தி

Naan Atchi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…

பெண் : கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்…
விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு…

பெண் : கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்…
காமாக்ஷி என்ற பெயர் எனக்கு…

பெண் : கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…
கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன்…
என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு…

—BGM—

பெண் : ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்…
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்…

பெண் : நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி…
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்…

—BGM—


Notes : Naan Atchi Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. நானாட்சி செய்து வரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading