yeya-en-kottikkaaraa-song-lyrics

ஏயா என் கோட்டிக்காரா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுந்தர் நாராயண ராவ் & மாளவிகா அனில்குமார்ஜிப்ரான்பாபநாசம்

Yeya En Kottikkaaraa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏயா…
என் கோட்டிக்காரா…
அட வாயா…
என் வேட்டைக்காரா…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும் சேட்டைக்காரா…
செத்தாலும் வாழ்ந்தாலும்…
நீதான் என் சோட்டுக்காரா…

ஆண் : ஏ… ஏட்டி…
என் கோட்டிக்காரி…
அடி ஏலா…
என் வேட்டைக்காரி…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும் சேட்டைக்காரி…
செத்தாலும் வாழ்ந்தாலும்…
நீதான் என் சோட்டுக்காரி…

பெண் : தேடிச் சேர்த்தக்…
காசப் போல்…
காதல் இருக்குதா…
கொஞ்சமாக எடுக்குற…
கஞ்சம் தடுக்குதா…

ஆண் : காசப் போலக்…
காதலும் செலவுக்கில்லட்டி…
கோடி முத்தம் வாங்கிக்க…
கஞ்சன் இல்லட்டி…

BGM

ஆண் : சின்னப் புள்ள…
நான்தான்…
பெண்ணே உண்மை அல்லோ…
என்னத் தாங்க இப்போ…
மூனு அம்மை அல்லோ… ஓ…

பெண் : பாலருவியும்…
தேனருவியும்… ஐந்தருவியும்…
உன் நேசத்தின்…
முன்னே… முன்னே…
தோத்தே போகும்…
மண்ணில் சொர்க்கமிது…

BGM

பெண் : ஏயா…
என் கோட்டிக்காரா…
அட வாயா…
என் வேட்டைக்காரா…
குத்தாலச் சாரல் போல்…
தலை தட்டும்…
சேட்டைக்காரா… ஆ… ஆ…
செத்தாலும் வாழ்ந்தாலும்…
நீதான் என் சோட்டுக்காரா…

ஆண் : காசப் போலக்…
காதலும் செலவுக்கில்லட்டி…
கோடி முத்தம் வாங்கிக்க…
கஞ்சன் இல்லட்டி…

BGM

பெண் : பட்டாம்பூச்சிப் போல…
வண்ணம் அள்ளித் தார…
கண்ணில் இன்னும் வேற…
ஏதோ சொல்லித் தார…

ஆண் : நான் நினைச்சதும்…
நீ நினைச்சதும்…
நூழிலையில…
தான் வழுக்கிட…
பேசி பேசி…
இன்னும் பேசி…
பேசா நிலை வருமோ…

பெண் : தேடிச் சேர்த்த…
காசப் போல்…
காதல் இருக்குதா… ஆ…
கொஞ்சமாக எடுக்குற…
கஞ்சம் தடுக்குதா… ஆ…

ஆண் : காசப் போலக்…
காதலும் செலவுக்கில்லட்டி…
கோடி முத்தம் வாங்கிக்க…
கஞ்சன் இல்லட்டி…

BGM


Notes :  Yeya En Kottikkaaraa Song Lyrics in Tamil. This Song from Papanasam (2015). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஏயா என் கோட்டிக்காரா பாடல் வரிகள்.