மாளவிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & கே.எஸ்.சித்ராதேவாஉன்னைத்தேடி

Malavika Malavika Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

ஆண் : தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…

ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

BGM

ஆண் : உன்னை நான் முதல் முதலாய்…
பார்த்தேனே அப்போதே…
புதிதாக நான் பிறந்தேன்…

குழு : அது சரி அது சரி அது சரி அது சரி…

பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே…
என் பேரை நான் மறந்தேன்…

குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்…

ஆண் : நழுவுகின்ற தாவணிதான்…
விடுமுறை கேட்கும் மாயமென்ன…

பெண் : தடுத்திடவே நினைத்தாலும்…
மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன…

ஆண் : குடை இருந்தும் நனைகின்றோம்…
காதல் மழை பொழிகிறதே…

பெண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாய் மாளவிகா…

BGM

ஆண் : நீ சிந்தும் புன்னகையை பார்த்தாலும் நெஞ்செல்லாம்…
சிலையாகி போவதென்ன…

குழு : அது சரி அது சரி அது சரி அது சரி…

பெண் : உன் கண்கள் என் கண்ணை…
சந்திக்கும் நேரம் நான்…
சிலையாக ஆவதென்ன…

குழு : அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்…

ஆண் : தூறல்தான் தேனாகும்…
விரலால் நீயும் தொட்டாலே…

பெண் : முள்ளெல்லாம் பூவாகும்…
உந்தன் பார்வை பட்டாலே…

ஆண் : கரைகின்றேன் தேய்கின்றேன்…
உன் நினைவில் உறைகின்றேன்…

பெண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீ இல்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

ஆண் : தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…

ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…

குழு : நீ இல்லாமல் நான் இல்லை…
நான் இல்லாமல் நீயில்லை…

ஆண் : மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…


Notes : Malavika Malavika Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Vaali. மாளவிகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading